கட்டோடு குழல் ஆட ஆட
கண் என்ற மீன் ஆட ஆட
பொட்டோடு நகை ஆட ஆட
கொண்டாடும் மயிலேறி ஆடு
கட்டோடு ...
பாவாடை காத்தோடு ஆட ஆட
பருவங்கள் பந்தாட ஆட ஆட
காலோடு கால் பின்னி ஆட ஆட
கள்ளுண்ட வண்டாக ஆடு
கட்டோடு ....
முதிராத நெல் ஆட ஆட
முளைக்காத சொல் ஆட ஆட
உதிராத மலர் ஆட ஆட
சதிர்ஆடு தமிழே நீ ஆடு
கட்டோடு ...
தென்னை மரத் தோப்பாக தேவாரப் பாட்டாக
புன்னை மரம் பூசொரிய
சின்னவளே நீ ஆடு
கண்டாங்கி முன் ஆட கன்னி மனம் பின் ஆட
கண்டு கண்டு நான் ஆட
செண்டாக நீ ஆடு
கட்டோடு ....
பச்சரிசி பல ஆட பம்பரத்து நாவாட
மச்சானின் மனமாட வட்டமிட்டு நீ ஆடு
வள்ளி மனம் நீராட தில்லை மனம் போராட
ரெண்டு பக்கம் நான் ஆட
சொந்தமே நீ ஆடு
கட்டோடு .....
Saturday, May 24, 2008
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
அருமையான வரிகள் எத்தனை
முறை கேட்டாலும்
உண்மை தான் -கேட்க கேட்க சலிக்காத பாடல் -mazhoth auama -நன்றி
காணொளிகளாகவோ இசைவடிவாகவோ காண உதவுங்்கள்்
Post a Comment
உங்கள் வருகைக்கு நன்றி