Monday, May 19, 2008

நெத்தியிலே போட்டு வச்சேன் .....

நெத்தியிலே பொட்டு வச்சேன்
நெஞ்சை அதில் தொட்டு வச்சேன்
செவ்வந்திப் பூச்செண்டு சேத்து முடிச்சேன்
தெம்மாங்குப் பாட்டொன்று தேடிப் படிச்சேன்
( நெத்தியிலே )


கட்டாத பூப்பந்து தள்ளாடுது
கருவண்டு மேலாக நின்றாடுது -
வண்ணப்பாவாடை காலோடு விளையாடுது -
வெள்ளிப்பாலாடை போல் உடல் தடம் போடுது -
அதைப்பார்த்து பார்த்து
கண்ணும் நெஞ்சும் கடை போடுது
எது தடை போடுது ?
( நெத்தியிலே )


தித்திக்கும் தேனாறு உண்டாகுது
ஜில்லென்ற காற்றோடு கரையேறுது
நீராடும் மேலாடை தாலாட்டுது -
அதுநேர் வந்து நெஞ்சைத் தொட்டு தேனூட்டுது -
அதைப்பார்த்து பார்த்து
கண்ணும் நெஞ்சும் கடை போடுது
எது தடை போடுது ?
( நெத்தியிலே )

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி