Tuesday, May 20, 2008

பாக்க பாக்க ....

பாக்கப் பாக்க சிரிப்பு வருதுஅடக்க முடியல்லே
நீ பொங்கிப் போட்டு திங்கிறதெப்போ
எனக்குத் தெரியலே
போகப் போக தெரியும் அம்மாபொங்குற வேல..
ஆக்கப் பொறுத்த அம்மாவுக்கு
ஆறப் பொறுக்கலே..
(போக)


வறுத்த வச்ச வாழக்காய
வாயில் வைக்க முடியலையே -
நீபொரியல் செஞ்ச புடலங்காயில்
கருக நாத்தம் சகிக்கலையே
கண்ட கண்ட உரத்தைப் போட்டு
காய்கறிய வளக்குறான் -
அந்தஉரத்தில் கூட ஊழல் பண்ணி
எங்க பேர கெடுக்குறான்
(பாக்க)


இதுல ஒண்ணும் கொறச்சல் இல்லே
சமச்சிடத்தான் தெரிஞ்சுக்கலே -
சிலர்எதுவும் செய்ய லாயக்கில்லே
பதவி ஆசை விடுவதில்லே
கலப்படமா சரக்கு இருக்கு
எதுவும் இப்போ சுத்தமில்லே -
அதுபுலப்படும் நாள் வரும் வரைக்கும்
என்னைச் சொல்லி குத்தமில்லே
(போக)


கடவுள் ஒரு சமையல்காரன்
மனிதர்கள சமைச்சு வச்சான்
சமைச்சதிலே ஆண் பெண் என்று
ஜாதிகளப் பிரிச்சு வச்சான்
அவன் கண்ட ஜாதி ரெண்டு..
நீ பெண்ஜாதி.. ஆ...நான் ஆண் ஜாதி..
அவன் கண்ட ஜாதி ரெண்டு
நம்மிடையே நூறு உண்டு
அந்த வியாதி இங்கே காய்கறிக்கும்
வந்ததனால் வம்பு இன்று
(போக)

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி