Friday, May 16, 2008

தேர் ஏது ...

தேர் ஏது சிலை ஏது திருநாள் ஏது..
தெய்வத்தையே மனிதரெல்லாம் மறந்த போது..
பூவேது கொடி ஏது வாசனை ஏது..
புன்னகையே கண்ணீராய் மாறும் போது..

ஊரேது உறவேது உற்றார் ஏது..
உறவெல்லாம் பகையாக ஆகும் போது..
ஒன்றேது இரண்டேது மூன்றும் ஏது..
ஒவ்வொன்றும் பொய்யாகிப் போகும் போது..

தேர் ஏது சிலை ஏது திருநாள் ஏது..
தெய்வத்தையே மனிதரெல்லாம் மறந்த போது..
இனம் பார்த்து குணம் பார்த்து மனம் சென்றது..
மனம் போன வழி தேடி உயிர் சென்றது..
உயிர் போன பின்னாலும் உடல் நின்றது..
உதவாத உடலிங்கு அசைகின்றது..

தேர் ஏது சிலை ஏது திருநாள் ஏது..
தெய்வத்தையே மனிதரெல்லாம் மறந்த போது..

அசைகின்ற உடல் தேடி உயிர் வந்தது..
உயிர் வந்த வழி தேடி மனம் வந்தது..
மனத்தோடு குணத்தோடு இனம் வந்தது..
இனத்தோடு இனம் சேரும் தினம் வந்தது..

தேர் ஏது சிலை ஏது திருநாள் ஏது..
தெய்வம் போல் மனிதரெல்லாம் மாறும் போது

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி