Thursday, May 15, 2008

என்ன பொருத்தம் ...

என்ன பொருத்தம் நமக்குள் இந்தப் பொருத்தம்ஆஹா..
என்ன பொருத்தம் நமக்குள் இந்தப் பொருத்தம்
காதல் என்னும் நாடகத்தில் கல்யாணம் சுபமே..
(என்ன)


நான் சொல்றதுக்கு எதிர்த்தா பேசறீங்க..
மறுபடியும் சொல்றேன்..
அவளப் பாக்க நீங்க போகவே கூடாது...
மறுபடியும் சொல்றேன்.. அவளப் பாத்தே தீருவேன்
கூடாதுன்னா கூடாது
போவேன்
கூடாது
போய்த்தான் தீருவேன்
கூடாது
போய்த்தான் தீருவேன்
கூடாது
என்னம்மா இது ? }


கல்யாணப் பந்தல் கட்டி போடட்டும் மேடை
கட்டிக் கொண்டாடட்டும் வண்ணப் பட்டாடை
நாட்டியமாடட்டும் நாடகப் பாவை
நானதை பார்க்கட்டும் ஆனந்தப் பாவை
பார்க்கட்டுமா.. கேட்கட்டுமா..
(என்ன)


அப்பா. ஆ... மறுபடியும் சொல்றேன்..
நீங்க அவகிட்ட போய் பேசக்கூடாது..
மறுபடியும் சொல்றேன்.. நான் அவகிட்ட போய் பேசுவேன்..
கண்டிப்பா சொல்றேன்.. நீங்க அவகிட்ட போய் பேசக்கூடாது..
கண்டிப்பா சொல்றேன்.. நான் பேசுவேன்..
பேசுவீங்களா..
பேசுவேன்..
நீங்க... பேசுவீங்க..?
நான்... பேசுவேன்..
ஆஹா... ஆஹா..
பேசக்கூடாது
பேசுவேன்..
பேசக்கூடாது
பேசுவேன்..
கூடாது
பேசுவேன்..
கூடாது .......}


சம்சாரக் கப்பல் கொஞ்சம் போகட்டும் நேரே
தந்தையும் தாய் என்று ஆன பின்னாலே
போராட்டம் தீர்ப்பது பிள்ளையின் வேலை
பேரனைச் சுமப்பது பாட்டனின் சேவை
முத்துப் பிள்ளை.. பெற்றுக் கொடு ..ஆஹா..
(என்ன)

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி