Thursday, May 8, 2008

அதோ அந்த பறவை ....


அதோ அந்த பறவை போல வாழவேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும்

ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

(லலாலா லா...) (அதோ அந்த பறவை..)

காற்று நம்மை அடிமை என்று விலகவில்லையே
கடல் நீரும் அடிமை என்று சுடுவதில்லையே
காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே
காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே

ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம் (அதோ அந்த பறவை..)

தோன்றும்போது தாயில்லாமல் தோன்றவில்லையே
சொல்லில்லாமல் மொழியில்லாமல் பேசவில்லையே
வாழும்போது பசியில்லாமல் வாழவில்லையே
போகும்போது வேறுப்பாதை போவதில்லையே

ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம் (அதோ அந்த பறவை..)

கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை
கோவில் போல நாடு காண வேண்டும் விடுதலை
அச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை
அடிமை வாழும் பூமி எங்கும் வேண்டும் விடுதலை

ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம் (அதோ அந்த பறவை..)
குறிப்பு :
பலரும் அறிந்த தகவல் தன் இது .கவியரசர் கண்ணதாசனோடு மக்கள் திலகம்
பிணக்கு கொண்டிருந்த நேரம் அது .இந்த பாடலை பல கவிஞர்கள் எழுதியும் திருப்தி தராமல் போகவே ,கவியரசரை எழுதச் சொல்லி கேட்கலாமா என்று பயந்து கேட்டவர்களிடம் ,மக்கள் திலகம் சொன்னாராம் 'அவர் கொள்கைக்கும் என் கொள்கைக்கும் தான் வேறுபாடு அவர் கவிதைக்கும் எனக்கும் அல்ல 'என்று .
அவரை தவிர யார் எழுதியிருக்க முடியும் இந்த வரிகளை ?

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி