Thursday, August 28, 2008

சிரிப்பவர் சில பேர் ....

சிரிப்பவர் சிலபேர் அழுபவர் பலபேர்
இருக்கும் நிலை என்று மாறுமோ
சிரிப்பவர் சிலபேர் அழுபவர் பலபேர்
இருக்கும் நிலை என்று மாறுமோ

உழைப்பவன் வாழ்வே வீதியிலே
உறங்குவதோ நடை பாதையிலே
உழைப்பவன் வாழ்வே வீதியிலே
உறங்குவதோ நடை பாதையிலே
இரக்கம் காட்டத்தான் நாதியில்லே
இரக்கம் காட்டத்தான் நாதியில்லே -

தினம் சிரிப்பவர் சிலபேர் அழுபவர் பலபேர்
இருக்கும் நிலை என்று மாறுமோ


இருப்பவர் உள்ளம் திறந்திடுமா
ஏழ்மையும் வறுமையும் பறந்திடுமா
அழுபவர் சிரிக்கும் நாள் வருமா
அழுபவர் சிரிக்கும் நாள் வருமா ....

சிரிப்பவர் சிலபேர் அழுபவர் பலபேர்
இருக்கும் நிலை என்று மாறுமோ

உயர்ந்தவர் தாழ்ந்திட தேவையில்லை
உள்ளதை இழந்திட சொல்லவில்லை
உயர்ந்தவர் தாழ்ந்திட தேவையில்லை
உள்ளதை இழந்திட சொல்லவில்லை
உழைப்பவர் உயர்ந்தால் போதுமையா
உழைப்பவர் உயர்ந்தால் போதுமையா -

தினம் சிரிப்பவர் சிலபேர் அழுபவர் பலபேர்
இருக்கும் நிலை என்று மாறுமோ
சிரிப்பவர் சிலபேர் அழுபவர் பலபேர்
இருக்கும் நிலை என்று மாறுமோ

பாடல் :மருதகாசி

இசை :கே.வி.மகாதேவன்

பாடியவர்:சீர்காழி கோவிந்தராஜன்

2 comments:

Anonymous said...

பாடலாசிரியர்கள் , இசையமைப்பாளர்கள் விவரத்துடன் எழுதினால் இன்னும் நன்றாக இருக்குமல்லவா ?

கணேஷ்

பூங்குழலி said...

உண்மை தான் .முதலில் பாடல்களை திரட்டி விட்டு பின்பு இந்த விவரங்களை சேர்க்கலாம் என்றிருக்கிறேன் .

நன்றி

பூங்குழலி

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி