Thursday, August 28, 2008

நீராழி மண்டபத்தில் ....

நீராழி மண்டபத்தில்
தென்றல் நீந்தி வரும் நள்ளிரவில்
தலைவன் வாராமல் காத்திருந்தாள்
பெண்ணொருத்தி விழிமலர் பூத்திருந்தாள்
நாடாளும் மன்னவனின்
இதய வீடாளும் பெண்ணரசி
தனிமை தாளாமல் தவித்திருந்தாள்
மன்னன் கை தொடும்போது தலை குனிந்தாள்


வாடையிலே வாழை இலை குனியும் -
கரைவருகையிலே பொங்கும் அலை குனியும்
காதலிலே பெண்மை தலை குனியும் -
இடம்கொடுப்பதற்கே நாணம் தடை விதிக்கும்
பெண்ணிலவு அங்கே நாணுவதைக் கண்டு
வெண்ணிலவு முகிலில் போய் மறைய
காதலனும் நல்ல வேளை கண்டான் -
அவள்பூ முகத்தில் முத்தம் நூறு கொண்டான்
( நீராழி)


தேனளந்தே இதழ் திறந்திருக்க -
அதைத்தான் அளந்தே மன்னன் சுவைத்திருக்க
பொய் மறைந்த நிலவும் முகிழ்த்திருக்க -
வந்துவாய் நிறைய அவர்க்கு வாழ்த்துரைக்க
பேரளவில் இருவர் என்றிருக்க -
சுகம்பெருவதிலே ஒன்றாய் இணைந்திருக்க
கீழ்த்திசையில் கதிர் தோன்றும் வரை -
அங்குபொழிந்ததெல்லாம் இன்ப காதல் மழை
( நீராழி)

பாடல் :வாலி

இசை :எஸ் .எம் .சுப்பையா நாயுடு

பாடியவர் :டி .எம் .சௌந்தராஜன்

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி