Tuesday, August 19, 2008

கலையோடு கலந்தது உண்மை ..

கலையோடு கலந்தது உண்மை
நான் கலையோடு கலந்தது உண்மை
கற்புக் கனலோடு பிறந்த
என் தமிழாளும் பெண்மை (கலை)

அழியாத நீதி நெறி விளையாடும் காட்சி
நிலையான சோழ மன்னன் எழில் மேவும் ஆட்சி
ஆடல் கணிகை பெற்ற மணிமேகலை
தனைத் தேடித் திரிந்த ஒரு சோழன் பிள்ளை
நாடும் வழி மறந்து தவறு செய்தான்
நகரத்து மாந்தர் கையில் உயிர் துறந்தான்

வெற்றி சேனையின் கொற்றக் காவலன்
வீணர்கள் பாதையை நாடுவதோ?
மான மனிதர் வாழும் உலகில்
மங்கை உலகம் பொங்கி அழுது வாடுவதோ?
கதி மாறி வழி மாறி விளையாடும்
சதிகாரர் வாழ்வு நிலையாகுமோ?


பற்றிப் பெருகும் கற்புக் கனலில்
அரசர் யாவரும் அழிவதே அறமோ?
கருவூரை வளைத்து அடியோடு எரிக்கும்
காலம் அறியும் விதியிலையோ? (கலை)

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி