Tuesday, August 26, 2008

முகத்தை பார்த்ததில்லை ....

முகத்தை பார்த்ததில்லை
அன்பு மொழியை கேட்டதில்லை
இந்த மனதை கொடுத்ததில்லை
இதில் மயக்கம் வந்ததென்ன
முகத்தை பார்த்ததில்லை
அன்பு மொழியை கேட்டதில்லை
இந்த மனதை கொடுத்ததில்லை
இதில் மயக்கம் வந்ததென்ன


முகத்தை பார்த்ததில்லை
பிறர் சொல்லால் கேட்டதில்லை
இதழ் சுவையை அறிந்ததில்லை
இதில் மயக்கம் வந்ததென்ன


முகத்தை பார்த்ததில்லை
பிறர் சொல்லால் கேட்டதில்லை
இதழ் சுவையை அறிந்ததில்லை
இதில் மயக்கம் வந்ததென்ன

பாதி இரவில் தூக்கம் விழிக்கும்
பாவம் அனல்போல் மேனி கொதிக்கும்
அருகில் இருக்கும் துணையை எழுப்பும்
உறங்கும் தலைவன் உடலை திருப்பும்


முகத்தை பார்த்ததில்லை
பிறர் சொல்லால் கேட்டதில்லை
இதழ் சுவையை அறிந்ததில்லை
இதில் மயக்கம் வந்ததென்ன

திறந்து கிடக்கும் கதவை அடைக்கும்
எரியும் விளக்கின் திரியை குறைக்கும்
மெல்ல நெருங்கும் சொல்ல தொடங்கும்
முதலில் தயங்கும் முடிவில் மயங்கும்

முகத்தை பார்த்ததில்லை
பிறர் சொல்லால் கேட்டதில்லை
இதழ் சுவையை அறிந்ததில்லை
இதில் மயக்கம் வந்ததென்ன


மயக்கம் கலையும்
மௌனம் நிலவும்
குளிர்ந்த மேனி காற்றில் உலரும்
களைப்பும் தோன்றும்
கண்கள் மூடும்
காலை விடிந்தால் நீரில் ஆடும்

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி