Monday, August 25, 2008

நேத்து பூத்தாளே ....

நேத்து பூத்தாளே ரோஜா மொட்டு
பறிக்க கூடாதோ லேசா தொட்டு
கட்டி போடாத குமரி சிட்டு
கண்கள் பாடாதோ காதல் மெட்டு
கட்டி போடாத குமரி சிட்டு
கண்கள் பாடாதோ காதல் மெட்டு
நேத்து பூத்தாளே ரோஜா மொட்டு
பறிக்க கூடாதோ லேசா தொட்டு

கிட்ட வந்தாலே கோபம் வரும்
விட்டு போனலோ தாபம் வரும்
தத்தி தள்ளாடும் தங்க குடம்
வந்து சேராதோ அந்தப்புரம்
தத்தி தள்ளாடும் தங்க குடம்
வந்து சேராதோ அந்தப்புரம்
உன்ன பூவா நெனப்பேன்
நெனச்சு கையால் எடுப்பேன்
எடுத்து நெஞ்சோடணைப்பேன்
அணைச்சு எல்லாம் முடிப்பேன்
அணைச்சு எல்லாம் முடிப்பேன்
நேத்து பூத்தாளே ரோஜா மொட்டு
பறிக்க கூடாதோ லேசா தொட்டு

பெட்டை பின்னோடு சேவல் வரும்
சேவல் பின்னோடு ஆவல் வரும்
ஆவல் வந்தாலே காதல் வரும்
காதல் வந்தாலே ஊடல் வரும்
இந்த காதல் கணக்கு
நமக்கு கண்ணில் இருக்கு
காலம் எதுக்கு ஒதுங்க நேரம் ஒதுக்கு
நெருங்க நேரம் ஒதுக்கு
நேத்து பூத்தாளே ரோஜா மொட்டு
பறிக்க கூடாதோ லேசா தொட்டு

அம்மன் தேராட்டம் ஆடிக்கொண்டு
அன்ன கிளியாட்டம் பாடிக்கொண்டு
அர்த்த ஜாமத்தில் தேடிக்கொண்டு
நித்தம் வருவாளோ அல்வா துண்டு
இந்த மாமன் மயக்கம்
விடிஞ்சா தீரும் வரைக்கும்
மனசு தாவி குதிக்கும்
ஒடம்பு தீயா கொதிக்கும்
ஒடம்பு தீயா கொதிக்கும்
நேத்து பூத்தாளே ரோஜா மொட்டு
பறிக்கக் கூடாதோ லேசா தொட்டு

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி