Monday, September 1, 2008

கையை தொட்டதும் ...

கையை தொட்டதும் மெய்யை சிலிர்க்குதே
காதலின் வேகம் தானா
அந்திகாலத்தின் போகந்தானா ?
அனுராகத்தின் யோகந்தானா ?

தெய்வீக காதல் கனிந்திடும்
தேகத்திலே ஒரு சக்தியுண்டு
தெய்வீக காதல் கனிந்திடும்
தேகத்திலே ஒரு சக்தியுண்டு
அதை தேடி சித்தி பெற்று விட்டால்
இந்த லோகத்திலே பெரும் முக்தியுண்டு

பழுத்த பழம் ஆசைப் பட்டு
சும்மா பாசாங்கு பண்ணாதே பேசிக்கிட்டு
களைத்து போற நேரத்திலே
இங்கு கல்யாண மாப்பிள்ளை போல வந்து
பழுத்த பழம் தித்திக்கும்டி
இந்த பாழும் காயெல்லாம் புளிக்குமடி
அழுத்தமாக பேசாதேடி பெண்ணே
அத்தனையும் இள ரத்தமடி

குடுகுடு வயசிலே கும்மாளமா நீ போடுறே
சின்ன குழந்தை போலவே
அங்கையும் இங்கையும் ஓடுறே
கடுகடு வெனவே பேசியே ஏளனம் பண்ணாதே
அன்னக்காவடி சத்திரம் சாவடியாகவே எண்ணாதே
திடுதிடுவெனவே வந்தது ஏன் இங்கு நில்லாதே
நடு தெருவில் தள்ளியே
கதவை சாத்துவேன் துள்ளாதே

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி