Friday, August 22, 2008

கன்னி ஒருத்தி மடியில் ....

கன்னி ஒருத்தி மடியில்
காளை ஒருவன் மயங்கி
கதை கதையாய் சொல்ல வந்தான்
கன்னி ஒருத்தி ஒருத்தி மடியில்
காளை காளை காளை ஒருவன் மயங்கி
கதை கதையாய் சொல்ல வந்தான்


காலைப்பொழுதும் விடிய
காதல் முழுதும் முடிய
சுவை சுவையாய் அள்ளி தந்தாள்
கன்னி ஒருத்தி மடியில்
காளை ஒருவன் மயங்கி
கதை கதையாய் சொல்ல வந்தான்



சொல்லி சொல்லி முடித்துவிட்டான்
அதை சொல்லும் வரை துடிக்க விட்டான்
சொல்லி சொல்லி முடித்துவிட்டான்
அதை சொல்லும் வரை துடிக்க விட்டான்
பெண்மை என்னும் பூவும் கொஞ்சம்
மென்மை மாறி போகும் வண்ணம்
பெண்மை என்னும் பூவும் கொஞ்சம்
மென்மை மாறி போகும் வண்ணம்
கன்னி ஒருத்தி மடியில்
காளை ஒருவன் மயங்கி
கதை கதையாய் சொல்ல வந்தான்

செவ்விழனி சாரெடுத்து கொடுத்தாளோ
தன்னை ஒரு தென்னை என நினைத்தாளோ
செவ்விழனி சாரெடுத்து கொடுத்தாளோ
தன்னை ஒரு தென்னை என நினைத்தாளோ
இதழ்களை இதழ் கொண்டு மறைத்தாளோ
ஈரெட்டு வயதினில் மலர்ந்தாளோ
தேனருவி சாரென நினைத்தானோ
தொட்டு தொட்டு பட்டுடலை நனைத்தானோ
கடலினில் படகென மிதந்தானோ
காலத்தை காதலில் மறந்தானோ
கன்னி ஒருத்தி மடியில்
காளை ஒருவன் மயங்கி
கதை கதையாய் சொல்ல வந்தான்

கொத்து மலர் பூங்குழலை மெத்தைப்போலே
கொண்டு வந்த வஞ்சி மகள் நெஞ்சின் மேலே
கொத்து மலர் பூங்குழலை மெத்தைப்போலே
கொண்டு வந்த வஞ்சி மகள் நெஞ்சின் மேலே
மணிவிழி மயங்கிட கிடந்தானோ
மேனியை கைகொண்டு அளந்தானோ
மூங்கிலிலை காடிருக்கும் இடம் பார்த்து
மெல்லிடையை அள்ளுகிற கரம் சேர்த்து
மூங்கிலிலை காடிருக்கும் இடம் பார்த்து
மெல்லிடையை அள்ளுகிற கரம் சேர்த்து
கலைகளை பழகிட துணிந்தானோ
காவிய பூமகள் துவண்டாளோ
கன்னி ஒருத்தி மடியில்
காளை ஒருவன் மயங்கி
கதை கதையாய் சொல்ல வந்தான்

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி