Monday, August 4, 2008

உழைப்பதிலா .....

உழைப்பதிலா உழைப்பை பெறுவதிலா இன்பம்
உண்டாவதெங்கே சொல் என் தோழா
உழைப்பவரே உரிமை பெறுவதிலே இன்பம்
உண்டாகும் என்றே சொல் என் தோழா

கல்வி கற்றோம் என்ற கர்வதிலே இன்பம்
உண்டாவதில்லை என் தோழா
கல்லாத பேரையெல்லாம் கல்வி பயிலச் செய்து
காண்பதில் தான் இன்பம் என் தோழா

இரப்போர்க்கு ஈதலிலும் இரந்துண்டு வாழ்வதிலும் இன்பம்
உண்டாவதில்லை என் தோழா
அரிய பல் தொழில் செய்து அனைவரும் பகிர்ந்துண்டு
அன்புடன் வாழ்வதின்பம் என் தோழா

பட்டத்திலே பதவி உயர்வதிலே இன்பம்
கிட்டுவதே இல்லை என் தோழா
உனை ஈன்ற தாய் நாடு உயர்வதிலே இன்பம்
உண்டாகும் என்றே சொல் என் தோழா

1 comment:

சு.செந்தில் குமரன் said...

முதல் வரியே பிழை .ம்ஹூம்!

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி