Monday, August 18, 2008

ஆடிவரும் ஆடகப் ...

ஆடிவரும் ஆடகப் பொற்பாவையடி நீ
ஆடிவரும் ஆடகப் பொற்பாவையடி நீ
அன்றும் இன்றும் என்றுமே என் ஆவியடி நீ
அன்றும் இன்றும் என்றுமே என் ஆவியடி நீ
ஆடிவரும் ஆடகப் பொற்பாவையடி நீ
ஆடிவரும் ஆடகப் பொற்பாவையடி நீ

தேடிவரும் இன்பமெல்லாம் நிச்சயமே
தேடிவரும் இன்பமெல்லாம் நிச்சயமே
சீர்மிகுந்த திராவிடர்க்கு லட்சியமே
சீர்மிகுந்த திராவிடர்க்கு லட்சியமே
ஆடிவரும் ஆடகப் ஆஆஆஆ.. ஆஆஆஆ..
பொற்பாவையடி நீ
ஆடிவரும் ஆடகப் பொற்பாவையடி நீ

செந்தமிழ்கே சொந்தம் எது ?
சிந்துபாட்டு ...சிந்துபாட்டு
தென்பொதிகை தந்ததெது
தென்றல் காற்று ..தென்றல் காற்று
எந்தனுக்கே சொந்தம் எது ?
...ம்ம்ம்ம்..ம்ம் சொல்லு
எந்தனுக்கே சொந்தம் ..இந்த இன்ப ஊற்று
இங்கின்றிதமாய் இதழால் விளையாட்டு
இங்கின்றிதமாய் இசையால் விளையாட்டு
ஆடிவரும் ஆடகப் ஆஆஆஆ.. ஆஆஆஆ..
பொற்பாவையடி நீ
ஆடிவரும் ஆடகப் பொற்பாவையடி நீ

வெண்ணிலவை கைப்பிடித்து விளையாட‌
வெண்ணிலவை கைப்பிடித்து விளையாட‌
எண்ணுதற்கு நான் இன்னும் சின்ன பிள்ளையா
நான் சின்ன பிள்ளையா
வெண்ணிலவை கைப்பிடித்து விளையாட‌
எண்ணுதற்கு நான் இன்னும் சின்ன பிள்ளையா
நான் சின்ன பிள்ளையா
சின்னஞ்சிறு வெண்ணிலவே ஓடி வந்தால்
ஆஆஆஆ..ஆஆஆ...ஆஆஆ.
சின்னஞ்சிறு வெண்ணிலவே ஓடி வந்தால்
என்ன தடை சொல்லடி
என்ன‌ சின்னக் கிளியே
ஆடிவரும் ஆடகப் ஆஆஆஆ.. ஆஆஆஆ..
பொற்பாவையடி நீ
ஆடிவரும் ஆடகப் பொற்பாவையடி நீ

சங்கத் தமிழ் பண்பும் நிறையன்பும் இருந்தும்
சங்கத் தமிழ் பண்பும் நிறையன்பும் இருந்தும்
எங்களிடம் ஏது பணம் ஏழையன்றோ நான்
சங்கத் தமிழ் பண்பும் நிறையன்பும் இருந்தும்
எங்களிடம் ஏது பணம் ஏழையன்றோ நான்
பொங்கி வரும் அழகினிலே ஏழையில்லை...
ஆ..ஆஆஆ..ஆஆஆஆஆ..
பொங்கி வரும் அழகினிலே ஏழையில்லை...
நீ ஏழையில்லை
பூத்தமலர் சிரிப்பினிலே ஏழையில்லை
நீ ஏழையில்லை
செங்கரும்பு பேச்சினிலே ஏழையில்லை
நீ ஏழையில்லை
இந்த‌ சிந்தனையெல்லாம் உனக்கு தேவையே இல்லை !


ஆடிவரும் ஆடகப் பொற்பாவையடி நீ
ஆடிவரும் ஆடகப் பொற்பாவையடி நீ !

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி