Thursday, August 28, 2008

கண் பட்டது கொஞ்சம் ...

கண்பட்டது கொஞ்சம்
புண்பட்டது நெஞ்சம்
கை தொட்டது உன்னை
குளிர் விட்டது என்னை
(கண்)


அந்திப் பொழுது போக போக ஆசை வந்தது -
அதுமுதல் முதலாய் தொடங்கும்போது மயக்கம் வந்தது
விழி மலர மலர பார்த்த பார்வை மனதில் விழுந்தது -
உடல் குலுங்கக் குலுங்க சிரித்த அழகு மடியில் விழுந்தது
(கண்)


இந்தப் பேரழகு பெட்டகத்தை ஆடை மறைப்பதோ -
இல்லைபருவப்பெண்ணைப் பார்த்த கண்ணை ஆசை மறைப்பதோ
உடல் மறைத்திருக்கப் பார்த்தபோது உள்ளம் தெரியுமா -
அந்த உள்ளம் பொங்கும் வெள்ளத்திலே உறவு புரியுமா
(கண்)


நல்ல கோடைக் கால நேரத்திலும் குளிரெடுப்பதேன் -
உடல்குளிரெடுக்கும் காலத்திலும் கொதித்திருப்பதேன்
இந்த கோவை இதழ் வெளுத்திருக்கும் காரணம் என்ன -
உன்பால் விழிகள் சிவந்திருக்கும் காரியம் என்ன
(கண்)

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி