Thursday, August 28, 2008

பெண்ணே என்று ..

பெண்ணே என்று சொல்லவா
கண்ணே என்று சொல்லவா
பால் போன்ற மனதினில் ஏக்கமா
பகலிலும் பொய்யான தூக்கமா
(பெண்ணே)


சுருண்ட கூந்தல் காற்றினில் ஆட
துள்ளும் கால்கள் சிறு நடை போட
மருண்டு நின்றாய் மானென விழித்தாய்
மஞ்சள் முகத்தை ஏனடி கவிழ்த்தாய்
(பெண்ணே)


சின்ன இடையைக் கண்களில் அளப்பான்
சிவந்த இதழில் வண்டென குதிப்பான்
என்று நினைத்து ஏங்குகிறாயோ
ஏங்கி ஏங்கி தூங்குகிறாயோ
(பெண்ணே)


தொட்ட சுகமே இத்தனை என்றால்
தொடரும் நாளில் எத்தனை வருமோ
சிட்டு விழியே சித்திர முகமே
வீரன் வருவான் பொறுத்திரு மனமே
(பெண்ணே)

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி