Monday, August 25, 2008

என்ன பொருத்தமடி .....

என்ன பொருத்தமடி மாமா
ஹே மாமா
எனக்கிவர் மாலையிடலாமா இடலாமா
உள்ளதை சொல்லுங்கடி பாமா பிரேமா ஹேமா
என்ன பொருத்தமடி மாமா
எனக்கிவர் மாலையிடலாமா
உள்ளதை சொல்லுங்கடி பாமா
ஆமாமா ஆமாமா மாமா

பட்டமும் சட்டமும் கண்டது லண்டன் படிப்போ
பெண்ணையும் கண்ணையும் கண்டதும் ரத்த கொதிப்போ
மன்னவன் சிந்திடும் புன்னகை கள்ளச்சிரிப்போ
இந்திரன் சந்திரன் மன்மதன் என்னும் நினைப்போ
என்ன பொருத்தமடி மாமா ஹே மாமா
எனக்கிவர் மாலையிடலாமா இடலாமா
உள்ளதை சொல்லுங்கடி பாமா ஆமாமா ஆமாமா மாமா


கோபுரம் மீதினில் தாவிடும் வானரம்தான் இவன்தான்
பூவையின் பூ விழி பார்த்ததும் பைத்தியம் ஆனவனோ
பாலும் பழமும் வெறுப்பானோ
பள்ளி கொள்ளாமல் தவித்தானோ
தலையணை துணையாய் கொண்டானோ
கற்பனை சுகத்தை கண்டானோ


உத்தமி பத்தினி பெத்தது புத்திசாலிதான்
சித்திரை வெயிலில் பித்து பிடித்தான்
எப்பவும் இப்படி முப்பது பல்லை இளிப்பான்
இத்தனை வித்தைகள் கற்றவன் அத்தை மகன்தான்
ஆந்தையின் பார்வையும் பூனையின் மீசையும் ..
பாருங்கடி ஆடையை யாரிடம் வாடகை வாங்கினார் கேளுங்கடி
பார்க்க பார்க்க பரிதாபம்
பெண்களுக்கெல்லாம் அனுதாபம்
பட்டது போதும் பரிகாசம்
போகசொல்லடி வனவாசம்
என்ன பொருத்தமடி மாமா ஹே மாமா
எனக்கிவர் மாலையிடலாமா இடலாமா
உள்ளதை சொல்லுங்கடி பாமா ஆமாமா ஆமாமா மாமா

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி