Tuesday, August 26, 2008

ராமனின் நாயகி .....

ராமனின் நாயகி கம்பனின் காவியம்
பூமகள் வண்ணமோ ரவிவர்மன் ஓவியம்
பொன் மான் தேட சொல்லும் தலைவி அல்ல நான்
போட்ட கோட்டை தாண்டி செல்லும் மனைவி அல்ல நான்
எங்கு நீ அங்கு நான் எதிலுமே பங்கு நான்
வாழ்விலும் தாழ்விலும் பாதி நீ பாதி நான்

ஸ்ரீ ராமனின் நாயகி கம்பனின் காவியம்
நாயகன் கண்ணிலே ஆயிரம் நாடகம்
ராமனின் நாயகி கம்பனின் காவியம்

வில்லாக நீ இருக்க நான் வளைக்கவோ
நெஞ்சோடு ஆசை என்னும் கணை தொடுக்கவோ
மங்கை உன்ன கைகளே மாலைகள் அல்லவோ
மை இடும் கண்களே தீபம்தான் சொல்லவோ

ராமனின் நாயகி கம்பனின் காவியம்

தீயிலிட்ட போதும் தங்கம் தந்கமல்லவோ
தேவனுக்கு சொந்தம் இந்த அம்மனல்லவோ
வால்மீகி பாட்டில் சொன்ன பெண்மை அல்லவா
வைதேகி பூவை மிஞ்சும் மென்மை அல்லவா
கற்பிலும் பண்பிலும் சீதைப்போல் பாவை நான்
அன்பிலும் பண்பிலும் ராமன்போல் மன்னன் நான்

ஸ்ரீ ராமனின் நாயகி கம்பனின் காவியம்
நாயகன் கண்ணிலே ஆயிரம் நாடகம்
ராமனின் நாயகி கம்பனின் காவியம்

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி