Friday, August 22, 2008

கண் கவரும் சிலையே ...

கண் கவரும் சிலையே
காஞ்சி தரும் கலையே
கவி பிறவா முன் பிறந்த தமிழகத்தின் நிதியே
கண் கவரும் சிலையே
காஞ்சி தரும் கலையே
கவி பிறவா முன் பிறந்த தமிழகத்தின் நிதியே
கண் கவரும் சிலையே

பகை முடிக்க பலவகையாம் படைக்கலங்கள் மோதும்
எழில் சிலை வடிக்க சிறு உழியும் இருகரமும் போதும்.
பகை முடிக்க பலவகையாம் படைக்கலங்கள் மோதும்
எழில் சிலை வடிக்க சிறு உழியும் இருகரமும் போதும்
முகை வெடிக்கும் முறுவலென பெண்ணிதழில் தெரிவாய்
சினம் மூண்டெழுந்தால் ஆண்டவன்
பேய் தாண்டவமும் புரிவாய் தாண்டவமும் புரிவாய்...
கண் கவரும் சிலையே
காஞ்சி தரும் கலையே
கவி பிறவா முன் பிறந்த
தமிழகத்தின் நிதியே
கண் கவரும் சிலையே

படிக்குமுன்னே செவியினில் தேன் பாய வரும் தமிழ் போல்
நான் நினைக்குமுன்னே பல வடிவாய் நெஞ்சமெல்லாம் நிறைவாய்
படிக்குமுன்னே செவியினில் தேன் பாய வரும் தமிழ் போல்
நான் நினைக்குமுன்னே பல வடிவாய் நெஞ்சமெல்லாம் நிறைவாய்
எனக்குமுன்னே வாழ்ந்தவர்கள் எத்தனையோ கோடி
அந்த இடம் பெயர்ந்தார் பெருமை எல்லாம்
தொடர்கதைபோல் தருவாய்
கண் கவரும் சிலையே
காஞ்சி தரும் கலையே
கவி பிறவா முன் பிறந்த தமிழகத்தின் நிதியே
கண் கவரும் சிலையே

1 comment:

Information said...

சூப்பர் பாடல்

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி