Tuesday, August 26, 2008

அநியாயம் இந்த ஆட்சியிலே ....

(பகாவலி நாட்டிலே பகாவலி ஆட்சியிலே
நியாயமாய் வாழவும் வழி இல்லே
இது அநியாயம் அநியாயம் அநியாயம்)

அநியாயம் இந்த ஆட்சியிலே இது அநியாயம்
அநியாயம் இந்த ஆட்சியிலே இது அநியாயம்
இங்கு ஆண்களை பெண்கள் அடிமையாக்குவது அநியாயம்


கனிவாக பேசும் பெண்கள் கையிலே
கத்தியும் ஈட்டியும் இருக்குது
கணவனை கண்டால் மனைவியர் எல்லாம்
காளை போலவே முறைக்குது
கணவனை கண்டால் மனைவியர் எல்லாம்
காளை போலவே முறைக்குது
இங்கே ஆண்களை பெண்கள் அடிமையாக்குவது அநியாயம்

தனியாக ஒரு வாலிபன் இருந்தால்
தரவேண்டும் பிரம்மச்சார்ய வரி
தாலி கட்டியே குடும்பம் நடத்தினால்
அவனும் தரணும் சம்சார வரி
தனியாக ஒரு வாலிபன் இருந்தால்
தரவேண்டும் பிரம்மச்சார்ய வரி
தாலி கட்டியே குடும்பம் நடத்தினால்
அவனும் தரணும் சம்சார வரி
இங்கு தடுக்கி விழுந்தா வரி,
குனிந்து நிமிர்ந்தா வரி
இட்டு வரி, பட்டி வரி, சட்டி வரி
இதைப்போல் ஆண்களை பெண்கள் அடிமையாக்குவது அநியாயம்

அர்த்தமே இல்லாத வரியை சுமத்தும்
பகாவலி ராணி ஆட்சியிலே
அர்த்தமே இல்லாத வரியை சுமத்தும்
பகாவலி ராணி ஆட்சியிலே
ஆதரவில்லாத ஏழை மக்களும்
அடிமையாகிறார் சூழ்ச்சியிலே
பொருத்தமே இல்லாத புது புது வரிகளை
போடுவதெல்லாம் நியாயமில்லே
எதிர்த்து கேட்கவும் நாதியில்லே
அவங்க என்ன செய்தாலும் கேள்வியில்லே
இங்கு ஆண்களை பெண்கள் அடிமையாக்குவது அநியாயம்

அநியாயம் இந்த ஆட்சியிலே இது அநியாயம்
இங்கு ஆண்களை பெண்கள் அடிமையாக்குவது அநியாயம்

வாழ பிறந்தவரை வாட்டி வதைக்கும் வரி
ஏழை முதுகிலே குடுக்கும் சாட்டை வரி
ஏழை முதுகிலே குடுக்கும் சாட்டை வரி..
இந்த நாட்டு வரி......

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி