Monday, August 25, 2008

மாட்டிகிட்டாரடி மயிலைக்காளை ....

மாட்டிகிட்டாரடி மயிலக்காள
கட்டி போட்டதடி கண்டாங்கி சேல
தங்கந்தாண்டி பொம்பள சிங்கந்தாண்டி
தங்கந்தாண்டி பொம்பள சிங்கந்தாண்டி
மாட்டிகிட்டாரடி மயிலக்காள
கட்டி போட்டதடி கண்டாங்கி சேல
தங்கந்தாண்டி பொம்பள சிங்கந்தாண்டி


கம்பெடுத்து சண்டை போடும் வாத்தியாரு
வீரத்தை எங்க கிட்டே காட்டினாரு
மாட்டிகிட்டாரடி மயிலக்காள
கட்டி போட்டதடி கண்டாங்கி சேல
தங்கந்தாண்டி பொம்பள சிங்கந்தாண்டி


ராஜநடை போட்டானம்மா அர்ஜுன மகாராஜா
ராஜநடை போட்டானம்மா அர்ஜுன மகாராஜா
ஆண்மகன் ஆனால் எண்ண அல்லியின் கை கூஜா
அய்யா கிட்டே கேளடியம்மா
பாரதம் படிச்சாரா
படிச்சா இப்படி பொம்பளகிட்டே வம்பு வளப்பாரா
கன்னியரின் கையில் வந்து சிக்கிக்கொண்டாரு
கரையேற வழியில்லாமல் சிந்திக்கின்றாரு
மாட்டிகிட்டாரடி மயிலக்காள
கட்டி போட்டதடி கண்டாங்கி சேல
தங்கந்தாண்டி பொம்பள சிங்கந்தாண்டி


மாமன் இவர் மானத்தை பாத்து ஜோரா நடந்தாரு
மாமன் இவர் மானத்தை பாத்து ஜோரா நடந்தாரு
மாண விரிச்ச வலையில் வந்து நேராய் விழுந்தாரு
ஹையோ பாவம் அழப்போராரு கிண்டல் வேணாண்டி
அறியாப்பிள்ளை அசடா இருந்தா விட்டு பிடிப்போம்டி
புத்தியில் ஏதோ கொஞ்சம் குற்றம் இருக்குதடி
பித்தங்கள் எல்லாம் சேர்ந்து மொத்தம் இருக்குதடி
மாட்டிகிட்டாரடி மயிலக்காள
கட்டி போட்டதடி கண்டாங்கி சேல
தங்கந்தாண்டி பொம்பள சிங்கந்தாண்டி

மேலாக்கு போட்டவளுக்கு வீரம் கிடையாதா
மேலாக்கு போட்டவளுக்கு வீரம் கிடையாதா
வாலாட்ட வந்தவருக்கு விவரம் புரியாதா
ஒன்னா சேர்ந்து கண்ணாம்மூச்சி ஆடம் போட்டோன்டி
அனுதாபத்தில் தோற்றவருக்கு கூட்டம் போட்டோன்டி
பட்டவரை போதும் என்று விட்டா போவாரு
பெண் என்றால் அச்சம் கொண்டு சிட்டா பறப்பாரு
மாட்டிகிட்டாரடி மயிலக்காள
கட்டி போட்டதடி கண்டாங்கி சேல
தங்கந்தாண்டி பொம்பள சிங்கந்தாண்டி
தங்கந்தாண்டி பொம்பள சிங்கந்தாண்டி
தங்கந்தாண்டி ஆம்பள சிங்கந்தாண்டி
தங்கந்தாண்டி ஆம்பள சிங்கந்தாண்டி

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி