Monday, August 18, 2008

கள்ளிருக்கும் ரோஜாமலர் ...

கள்ளிருக்கும் ரோஜாமலர் துள்ளுவதைப் பாரு
கன்னத்திலே இளமை மின்னுவதைப் பாரு
ஒய்ய் ஒய்ய்ய் ஒய்ய்
கள்ளிருக்கும் ரோஜாமலர் துள்ளுவதைப் பாரு
கன்னத்திலே இளமை மின்னுவதைப் பாரு
கண்ணுகுள்ளே பெண்ணழகு ஆடுவதைப் பாரு
உன்னிடமே நெஞ்சம் ஓடுவதைப் பாரு
ஒய்ய் ஒய்ய்ய் ஒய்ய்
கண்ணுகுள்ளே பெண்ணழகு ஆடுவதைப் பாரு
உன்னிடமே நெஞ்சம் ஓடுவதைப் பாரு
ஓய்ய் ஓய்ய்

வானத்திலே வெள்ளி நிலா
வானத்திலே வெள்ளி நிலா வட்டமிடும் போது
வஞ்சி மனம் பஞ்சணையில் பஞ்சு படும் பாடு
காதலுக்கு வெட்கமில்லை
கண்ணிருந்தும் தூக்கமில்லை
கட்டழகைப் பாரு பொட்டழகைப் பாரு
ஓய்ய் ஓய்ய் ஓய்ய்
கள்ளிருக்கும் ரோஜாமலர் துள்ளுவதைப் பாரு
ஓய்ய் ஓய்ய்


நேற்றுவரை நானிருந்த நிலைமையெல்லாம் வேறு
நேற்றுவரை நானிருந்த நிலைமையெல்லாம் வேறு
பார்த்தவுடன் நீ கொடுத்த பருவமலர் நூறு
பால்வடியும் உனது முகம் பாடுபடும் எனது மனம்
பாடிவந்தாய் பாவை ஓடிவந்தேன்
காளை பாடிவந்தாய் பாவை ஓடிவந்தேன்
காளை ஓய்ய் ஓய்ய் ஓய்ய்
கண்ணுகுள்ளே பெண்ணழகு ஆடுவதைப் பாரு

இன்று என்றும் நாளையென்றும் ஓடிச்செல்லும் காலம்
எந்நாளும் மாறாது காதலென்னும் கோலம்
தென்றலுக்கு ஓய்வுமில்லை சேர்ந்தவர்க்கு ஏக்கமில்லை
ஒன்றுபடும் போது இன்ப சுகம் கோடி
இன்ப சுகம் கோடி ஓய்ய் ஓய்ய் ஓய்ய்


கள்ளிருக்கும் ரோஜாமலர் துள்ளுவதைப் பாரு
உன்னிடமே நெஞ்சம் ஓடுவதைப் பாரு
ஓய்ய் ஓய்ய் ஓய்ய்
கள்ளிருக்கும் ரோஜாமலர் துள்ளுவதைப் பாரு !

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி