Wednesday, September 17, 2008

சும்மா இருந்தா ...

சும்மா இருந்தா சோத்துக்கு நஷ்டம்
சோம்பலை வளர்த்தா ஏற்படும் கஷ்டம்
உண்மையோடு உழைக்கணும்
தானேய் தனன--
மச்சான் ஒன்று சேர்ந்து வாழோணும்
தானேய் தண்னன்ன

படிச்ச வேலைக்கு பல பேர் நோட்டம்
பாக்கி வேலைக்கு ஆள் திண்டாட்டம்
கொடுத்த வேலையை முடிப்பது சிரேஷ்டம்
குடிசை தொழிலில் வேணும் நாட்டம்
அப்பன் தொழிலை அவனது பிள்ளை
சொப்பனத்திலுமே நினைப்பதும் இல்லை
இப்படி செய்வதனாலே தொல்லை
ஏற்பட்டதென்றால் கேட்பதுமில்லை
தெரிஞ்ச தொழிலை செய்தாலே
தான தண்னன்ன-மச்சான்
தாழ்வுமில்லை அதனாலே
தானேய் தண்னன்ன

வேலை வேலையின்னு ஓலமிட்டழுதா
ஆளை தேடி அது வீட்டுக்கு வருதா?
மூளையோடு நல்ல முயற்சியும் இருந்தா
வேலைக்கேது பஞ்சம் விவரம் புரியுதா
பாடு பட்டாலே பலனுண்டு
தானேய் தண்னன்ன-மச்சான்
பஞ்சம் தீர்க்க வழியுண்டு
தானேய் தண்னன்ன

மலைதனில் சிறியதும் பெரியதும் உண்டு
மனிதர்கள் அறிவிலும் அது போலுண்டு
உலகினில் அவரவர் திறமையும் கண்டு
தொழிலது புரிவது மிகமிக நன்று

1 comment:

Information said...

மிகவும் பழைய அருமையான பாடல்.

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி