Tuesday, September 30, 2008

பட்டத்து ராஜாவும் ...

பட்டத்து ராஜாவும் பட்டாள சிப்பாயும்
ஒன்றான காலமிது
என் மாமனாரே வழி மாறினாலே
உங்க மரியாதை என்னாவது


ஏழை என்ற இல்லாத ஜாதி யாராலே உண்டானது
சில கோழை கும்பல் தான் வாழவேண்டி
பேதங்கள் கொண்டாடுது
உன்மகள் பொன்மகள் கேவலம் மீனவன்
எனையே காதலித்தாள்
ஊரினில் யாவரும் ஓரினம் தான் எனும்
நீதியை ஆதரித்தாள் நீதியை ஆதரித்தாள்
(பட்டத்து ராஜாவும் )


மாமா உங்க முன்னேற்றம் எங்கள்
கண்ணீரில் தான் வந்தது
அட ராமா உண்மை சொன்னாலே கோபம்
என் மேலே ஏன் வந்தது ?
நீ கொண்ட நாணயம் பூட்டிய வீட்டுக்குள்
சிறையாய் இருக்குதய்யா
நான் கொண்ட நாணயம் நாட்டிலும் வீட்டிலும்
நிறைவாய் இருக்குதையா
நிறைவாய் இருக்குதையா
(பட்டத்து ராஜாவும் )


கோட்டை கட்டி கொண்டாட்டம் போட்ட
கூட்டங்கள் என்னானது
பல ஓட்டை கண்டு தண்ணீரில் மூழ்கும்
ஓடங்கள் போலானது
ஏற்றிய ஏணியை தூற்றிய பேருக்கு
இதுதான் பாடமையா
நாளிதழ் சொல்வதை நாட்டினில் நடப்பதை
கண்கொண்டு பாருமையா
கண்கொண்டு பாருமையா
(பட்டத்து ராஜாவும் )

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி