எத்தனை காலம்
கனவுகள் கண்டேன்
காண்பதற்கு உன்னை காண்பதற்கு
இறைவா உனக்கே குறை இல்லை என்றால்
திரை எதற்கு -இத்தனை
திரை எதற்கு
(எத்தனை )
சித்திரப் பாவை நெஞ்சில்
முத்திரையான உன்னை
தேடாதிருக்கலாமா (சித்திரை )
பத்தரை மாற்று கொண்ட பசும்பொன் மேனியை
பாராதிருக்கலாமா
(எத்தனை )
தூங்காத மஞ்சத்தில்
சுவையான இன்பத்தில்
தள்ளாடி தள்ளாடி விழ வேண்டும்
நீங்காத சொர்க்கத்தில்
நீ சேரும் நேரத்தில்
நான் கண்டு ஆனந்தப்படவேண்டும்
(எத்தனை )
மங்கை இங்கே மன்னன் அங்கே
மதி மயங்கும் முகமும் எங்கே முகமும் எங்கே
நெஞ்சம் இங்கே நினைவும் அங்கே
நான் விரும்பும் உயிரும் எங்கே உயிரும் எங்கே
நீ இருக்கும் இடத்தில்
இன்று நானிருக்க வேண்டும்
என்று தேடி இங்கு வந்தேன்
நேரம் காலம் வந்ததிங்கு
நிலமை மாற வேண்டுமென்று
நீதி கேட்க வந்தேன்
உயிருக்கு உயிர் தேடி
உரிமைக்கு போராடி
உன்னை நாடி நான் வந்து ஆடுகிறேன்
என் உளம் கண்டு உன்முன்னே பாடுகிறேன்
கொல்லாமல் கொல்லும் பொல்லாத கண்களுக்கு
சொல்லாமல் சொல்லி ஒரு விருந்து வைப்பேன்
அந்த சுவையில் உலகையே மறக்க வைப்பேன்
No comments:
Post a Comment
உங்கள் வருகைக்கு நன்றி