Wednesday, January 1, 2020

நீல வான பந்தலின் கீழே

நீல வான பந்தலின் கீழே
நிலமடந்தை மடியின் மேலே
காலதேவன் அரசாங்கம் நடக்குதடா
அவன் கட்டளையில்
இவ்வுலகம் கிடக்குதடா  (நீல வான ....)

காடு மலை வயல்கள் எல்லாம்
ஓ ஓ ஓகோகோகோ 
களஞ்சியங்கள் ஆகும்டா
பாடுகின்றன கடலும் நெருப்பும் 
படை வரிசை ஆகும்டா  (நீல வான ..)

சூரியனை பந்தாடி சுழல்வது தான் நாட்களாடா
ஓ ஓ ஓகோகோகோ
காரியமாய்  காற்றும் மழையும்
கடமை செய்யும் ஆட்களடா ஓகோ  (நீல வான ...)

பிறந்தவர்கள் இறந்திடவே
போட்டு வைத்தான் ஒரு சட்டம்
இறந்தவர்கள் பிழைக்க இன்னும்
இயற்றவில்லை மறு  சட்டம்  ஓகோகோ  (நீல வான ..)



No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி