Wednesday, March 4, 2009

பிள்ளை தமிழ் பாடுகிறேன்

பிள்ளை தமிழ் படுகிறேன்
ஒரு பிள்ளைக்காக பாடுகிறேன்
மல்லிகை போல் மனதில் வாழும்
மழலைக்காக பாடுகிறேன்
நான் பாடுகிறேன்
(பிள்ளை தமிழ் )

நீலக் கடல் அலை போல நீடூழி நீ வாழ்க
நெஞ்சமெனும் கங்கையிலே நீராடி நீ வாழ்க
காஞ்சி மன்னன் புகழ் போல காவியமாய் நீ வாழ்க
கடவுளுக்கும் கடவுளென கண்மணியே நீ வாழ்க
(பிள்ளை தமிழ் )

வான மழை துளியாவும் முத்தாக மாறாது
வண்ணமிகு மலர் யாவும் உன்போலே சிரிக்காது
தேடி வைத்த பொருள் யாவும் தேன் மழலை ஆகாது
திருவிளக்கின் ஒளி அழகும் உன் அழகைக் காட்டாது
(பிள்ளை தமிழ் )

3 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

இந்தப் பாடலில் அவர் வெளிப் படுத்தும் உணர்வுகள் மிக அற்புதமானவை.
அதிலும் வாணிஸ்ரீ அம்மையாரின் நுழைவிற்குப் பிறகு பார்ப்பவர்கண்களில் நீர் வர வைத்து விடுவார்.

பூங்குழலி said...

அவர் நிஜ வாழ்வின் ஏக்கங்கள் பிரதிபலித்திருக்கக் கூடும் இந்த பாடலில்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

உண்மை. படம் பார்த்த பெரும்பாலோருக்கு அந்த உணர்வு கண்டிப்பாக இருந்திருக்கும்

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி