Saturday, August 15, 2020

வீரமகன் போராட

வீரமகன் போராட 

வெற்றிமகள்  பூச்சூட 

மானமொரு வாழ்வாக

வாழ்வு நதி தேனாக  

முன்னேறுவோம் 

நம்நாட்டையே முன்னேற்றுவோம்

 (வீரமகன் ) 


நன்மை பூத்த கொடி மேலே 

நாதம் உலவும் கதை போலே 

நன்மை  பூத்த கொடி மேலே 

நாதம் உலவும் கதை போலே 

தீய கைகள் ஓங்க 

தேயும் மக்கள் ஏங்கும் 

நிலை மாறவே  

பழி யாவும் தீர 

வேலேந்துவோம் 

(வீரமகன் )


புள்ளிமான்கள் திண்டாட 

வேங்கை புலிகள் கொண்டாட 

புள்ளிமான்கள் திண்டாட 

வேங்கை புலிகள்  கொண்டாட 

மாதர் உள்ளம் வாடும்

காலம் மாற வேண்டும் 

மாதர் உள்ளம் வாடும் 

காலம் மாற   வேண்டும் 

புவி மீதிலே 

பொதுநீதி காண  

போராடுவோம் 

(வீரமகன் )


பண்பு  வாழ கலை வாழ 

பாரில் உழவு தொழில் வாழ 

பண்பு வாழ கலை வாழ 

பாரில் உழவு தொழில் வாழ 

தெய்வம் நின்று வாழ்த்தும்

தியாகம் செய்ய வேண்டும் 

தெய்வம்  நின்று வாழ்த்தும் 

தியாகம் செய்ய வேண்டும் 

பகை நீங்கவே 

நலம் காண -நாமும் 

வாளேந்துவோம் 


வாளேந்துவோம் 

வாளேந்துவோம் 

வாளேந்துவோம் 

வாளேந்துவோம் 


https://youtu.be/WchveRT6VUU

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி