Saturday, June 4, 2022

ராத்திரிக்கு பூவாவுக்கே லாட்டரி

ராத்திரிக்கு  பூவாவுக்கே லாட்டரி 

வாழ்க்கை லைட் எரிய பணம் தானே பேட்டரி 

ராப்பகல் அலைஞ்சால் என்ன 

நாய் போல் திரிஞ்சால் என்ன 

(ராத்திரிக்கு ) 


மானத்தோடு வாழ்ந்தால் என்ன 

மரியாதையாய் இருந்தால் என்ன 

(மானத்தோடு )

மாதக்கழிவிலே நாணயம் போகுது 

மாதம் முப்பதும் வாங்கியும் கட்டல 

(ராத்திரிக்கு  )


லைஃப் இல்லாது  உழைச்சு 

கடமே கிடந்தான் அடிக்கடி 

ஆமாப்பா 

இளைப்பு களைப்பு  இல்லாமே உழைச்சு 

கடமே கிடந்தான் அடிக்கடி 

எனக்கும் உனக்கும் சம்பளம் வாங்கி 

ரெண்டாம் நாளே நெருக்கடி 

ஏழெட்டு பிள்ளை குட்டிகளோடு 

வாழ பிறந்தவன் என்னா செய்வான்

(ராத்திரிக்கு  )


எட்டு நாளா அலையா அலைஞ்சும் 

ரெண்டனா  லாபமும் இல்லையன்றோ 

எல்லா மார்க்கெட்டும் டல்லன்றோ 

ஏமி சேசதி ராமா 

டப்பன்ந்த்தா  எக்கட போயிந்தே 


என்னாண்டு சொல்வது 

எங்கேண்டு போவது 

என்னாண்டு சொல்வது 

எங்கேண்டு போவது 

எந்த சாமியும் ஏன்னென்று  கேக்கல

கேக்கல ஏனெண்டு கேக்கல ஏனெண்டும்  கேக்கல 

ஆகா ஆகா வாரே வா 

பூவா தின்ட்டானா இல்லையான்னு பாக்கல  


ராப்பகல் அலைஞ்சால் என்ன 

நாய் போல் திரிஞ்சால் என்ன

காக்கா பிடிக்கவும் முடியாது  

பணத்தை திருடிப் பிழைச்சாலும் நடக்காது 

 (ராத்திரிக்கு )


  

Sunday, May 29, 2022

வாங்க எல்லோருமே சேர்ந்து ஒன்றாகவே

 வாங்க எல்லோருமே சேர்ந்து ஒன்றாகவே 

தீப நன்னாளை அன்பாக கொண்டாடுவோம்  

(வாங்க )

ஓ ஓ ஓ ஓ  

ஆ அ அ ஆ

ஜினு தக்க ஜினு தக்க ஜினு தக்கா  

தினு தக்க தினு தக்க தினு தக்கா 

ஹோய் -  தினு தக்க தினு தக்க தினு தக்கா 


ஜனஜனஜனஜனகன ஜனஜனகனகன எனவே 

கினரகினரகின கின கின கினரே 

வெடி பட்பட் 

மனம் பட் படா 

உடை டிப் டாப் 

மனம் பட் படா 

தலை குட் நைட் 

ஹரே சுப் சுப் சுப்   


மிக சிறியோரும் பெரியோரும்  மகிழ்வே கொண்டு 

ஆடித்  திரிவோர்  இன்று 

சுகம் பெறுவோம் என்று 

தம் சிக்கி தம் சிக்கி தம் சிக்கி 

தம் சிக்கி தம் சிக்கி தம் சிக்கி 


தீப ஒளி எங்கும் பாரேன் 

இளஞ்ஜோடி  எனத்தானே 

கிழ சோடி மகிழ்ந்தாடால்  பார்

ஆசை மன்மதரே 

ஆமா மன்மதியே

வான வெண்மதி நீ 

கான பொன்வானம் நீ 

இன்பமதே தரும் நன்னாளிதே 

(வாங்க ) 

Friday, January 15, 2021

எத்தனை காலம்

எத்தனை காலம் 

கனவுகள் கண்டேன் 

காண்பதற்கு உன்னை காண்பதற்கு 

இறைவா உனக்கே குறை இல்லை என்றால் 

திரை எதற்கு -இத்தனை 

திரை எதற்கு 

(எத்தனை )


சித்திரப்  பாவை நெஞ்சில்  

முத்திரையான உன்னை 

தேடாதிருக்கலாமா (சித்திரை )

பத்தரை மாற்று  கொண்ட பசும்பொன் மேனியை   

பாராதிருக்கலாமா 

(எத்தனை )


தூங்காத  மஞ்சத்தில் 

சுவையான இன்பத்தில் 

தள்ளாடி தள்ளாடி விழ வேண்டும் 

நீங்காத சொர்க்கத்தில் 

நீ சேரும் நேரத்தில்  

நான் கண்டு ஆனந்தப்படவேண்டும் 

(எத்தனை )


மங்கை இங்கே மன்னன் அங்கே  

மதி மயங்கும் முகமும் எங்கே முகமும் எங்கே 

நெஞ்சம் இங்கே நினைவும் அங்கே  

நான் விரும்பும் உயிரும் எங்கே உயிரும் எங்கே 

நீ இருக்கும் இடத்தில்  

இன்று நானிருக்க வேண்டும்

என்று தேடி இங்கு வந்தேன்  

நேரம் காலம் வந்ததிங்கு 

நிலமை மாற வேண்டுமென்று  

நீதி கேட்க வந்தேன் 

உயிருக்கு உயிர் தேடி 

உரிமைக்கு போராடி 

உன்னை நாடி நான் வந்து ஆடுகிறேன் 

என் உளம் கண்டு உன்முன்னே பாடுகிறேன் 

கொல்லாமல்  கொல்லும் பொல்லாத கண்களுக்கு 

சொல்லாமல் சொல்லி ஒரு விருந்து வைப்பேன் 

அந்த சுவையில் உலகையே மறக்க வைப்பேன்  


Saturday, October 3, 2020

It's easy to fool you

 Its easy to fool you 

To twist and turn you 

Catch me if you can 

Come try !Oh! my man !

(it's easy )


கண்ணடித்து காட்சி கண்டு 

காலடிக்குள் விழுந்த பேர்கள் கோடி -நீல 

விண்ணடித்த மின்னலென்று 

வட்டமிட்டு வந்ததிங்கு பாடி 

join me !let's go gay !gay!gay!gay!gay !

ஹம் தும் ப்யார் கரேங்கே 

join me !let's go gay !gay!gay!gay!gay !

ஹம் தும் ப்யார் கரேங்கே 


oh!it's easy to fool you ! 

hey !me ?

not so easy to fool ! I am nobody's tool 

what I feel I always do 

come!here  !without ado !ha!

 Its easy to fool you 

To twist and turn you 

Catch me if you can 

Come try !Oh! my woman !


கள்  மயக்கம் பெண் மயக்கம் 

என்னவென்று கண்டதில்லை நான் நான் -என்னை 

ஏய்ப்பதற்கும் சாய்ப்பதிற்கும் 

யார் நினைத்தும் ஆவதில்லை வீண் தான் 

 (கள் மயக்கம்)


join me ! let's go gay ...hey ..hey 

ஹம் தும் ப்யார் கரேங்கே 

join me ! let's go gay ...hey ..hey 

ஹம் தும் ப்யார் கரேங்கே

oh !yeah!

that's the name of  game 

just to tease and trick !ha!ha!

that's the name of the game 

just to tease and trick 

let's see who wins the fame 

come !get me ready quick! 


it's easy to fool you 

no !not at all !

to twist and turn you 

catch me if you can 

come try! oh my man !


அந்தரங்கம் என்னவென்று 

கண்டுகொள்ள வந்தவன் நான்  -இன்று 

ஏதோ மந்திரங்கள் தந்திரங்கள் 

சுந்தரப் பெண் உன்னிடத்தில் உண்டு 

மந்திரங்கள் தந்திரங்கள் 

சுந்தரப் பெண் உன்னிடத்தில் உண்டு 


join me ! lets go gay!

ஹம் தும் ப்யார் கரேங்கே 

join me ! lets go gay!gay !gay!

ஹம் தும் ப்யார் கரேங்கே 




Saturday, August 15, 2020

வீரமகன் போராட

வீரமகன் போராட 

வெற்றிமகள்  பூச்சூட 

மானமொரு வாழ்வாக

வாழ்வு நதி தேனாக  

முன்னேறுவோம் 

நம்நாட்டையே முன்னேற்றுவோம்

 (வீரமகன் ) 


நன்மை பூத்த கொடி மேலே 

நாதம் உலவும் கதை போலே 

நன்மை  பூத்த கொடி மேலே 

நாதம் உலவும் கதை போலே 

தீய கைகள் ஓங்க 

தேயும் மக்கள் ஏங்கும் 

நிலை மாறவே  

பழி யாவும் தீர 

வேலேந்துவோம் 

(வீரமகன் )


புள்ளிமான்கள் திண்டாட 

வேங்கை புலிகள் கொண்டாட 

புள்ளிமான்கள் திண்டாட 

வேங்கை புலிகள்  கொண்டாட 

மாதர் உள்ளம் வாடும்

காலம் மாற வேண்டும் 

மாதர் உள்ளம் வாடும் 

காலம் மாற   வேண்டும் 

புவி மீதிலே 

பொதுநீதி காண  

போராடுவோம் 

(வீரமகன் )


பண்பு  வாழ கலை வாழ 

பாரில் உழவு தொழில் வாழ 

பண்பு வாழ கலை வாழ 

பாரில் உழவு தொழில் வாழ 

தெய்வம் நின்று வாழ்த்தும்

தியாகம் செய்ய வேண்டும் 

தெய்வம்  நின்று வாழ்த்தும் 

தியாகம் செய்ய வேண்டும் 

பகை நீங்கவே 

நலம் காண -நாமும் 

வாளேந்துவோம் 


வாளேந்துவோம் 

வாளேந்துவோம் 

வாளேந்துவோம் 

வாளேந்துவோம் 


https://youtu.be/WchveRT6VUU

Wednesday, January 8, 2020

சிங்காரா வா வா

பழம் பாலைக் காய்ச்சி வச்சு 
பத்து நாளும் ஆயிருச்சு -ஹைய்யோ 
எனக்கு கல்யாண நேரம் வந்து 
காத்திருந்து போயிருச்சு 
ஹி ஹி  ஹிஹி 

சிங்காரா வா வா 
திருச்செந்தூரா வேலா 
இந்த ஜகத்த மயக்கும் 
முகத்தை படைத்த 
சிங்காரா வா வா 


சிங்காரா வா வா 
திருச்செந்தூரா வேலா 
இந்த ஜகத்த மயக்கும் 
முகத்தை படைத்த 
சிங்காரா வா வா 

தூங்காமல் காத்திருக்கேன் 
தோகமயில் வாகனனே 
தூங்காமல் காத்திருக்கேன் 
தோகமயில் வாகனனே 
என் தோழி கூட உன்னைப் பார்க்க 
துடிக்கிறாளே மோகனனே 
மோகனனே ஏ ஏ ஏ அ 

சிங்காரா 
சிங்காரா வா வா 
திருச்செந்தூரா வேலா 
இந்த ஜகத்த மயக்கும் 
முகத்தை படைத்த 
சிங்காரா வா வா 


அதோ வராண்டி 
பழனி ஆறுமுகந்தாண்டி 
அதோ வராண்டி
அதோ வராண்டி
பழனி ஆறுமுகந்தாண்டி 
ஆடும் மயில் ஏறிக்கிட்டு 
காடு மலை தாண்டிக்கிட்டு 
அதோ வராண்டி 
பழனி ஆறுமுகந்தாண்டி 
அதோ வராண்டி 
ஆதியிலே தினைபுலத்தில் 
ஆயர் ஓட்டும் வேளையிலேயே 
ச்சோ ச்சோ 
ஆதியிலே தினைபுலத்தில் 
ஆயர் ஓட்டும் வேளையிலேயே
ஆசை கொண்டு வேடனை போல 
வேடம் போட்ட வேல்முருகன் 
அதோ வராண்டி 
பழனி ஆறுமுகந்தாண்டி 
அதோ வராண்டி  

(அவர் ஏன் இங்கே வரப்போறாரு !
ஏன் வர மாட்டார் ?
அவர் தெய்வயானை வீட்டுக்கு போயிருப்பாரு )

ஆகா உனக்கென்ன ஆணவமடி 
ஆகா உனக்கென்ன ஆணவமடி இ இ  
ஆகா உனக்கென்ன ஆணவமடி இ  இ இ 
தெய்வயானையை  பற்றியே 
மானிடம் சொல்லவே 
ஆகா உனக்கென்ன ஆணவமடி 

போகாத இடத்துக்கே போன நெஞ்சை இங்கே 
சொல்லாதே சொல்லாதே 
புரியாமல் உளறாதே 
ஆகா உனக்கென்ன ஆணவமடி 

வள்ளி நாயகரே 
வந்தனமைய்ய
வள்ளி நாயகரே 
வந்தனமைய்ய
வள்ளி நாயகரே ..நாயகரே 
கள்ளி தெய்வயானையை 
காணவே சென்றீர் என்று 
சொல்லியே என்னை இவள் 
சோதனை செய்துவிட்டாள் 
சொல்லியே என்னை இவள் 
சோதனை செய்துவிட்டாள் 
வள்ளி நாயகரே
 வந்தனமைய்ய
வள்ளி நாயகரே 
வந்தனமைய்ய
வள்ளி நாயகரே
நாயகரே ...

Wednesday, January 1, 2020

நீல வான பந்தலின் கீழே

நீல வான பந்தலின் கீழே
நிலமடந்தை மடியின் மேலே
காலதேவன் அரசாங்கம் நடக்குதடா
அவன் கட்டளையில்
இவ்வுலகம் கிடக்குதடா  (நீல வான ....)

காடு மலை வயல்கள் எல்லாம்
ஓ ஓ ஓகோகோகோ 
களஞ்சியங்கள் ஆகும்டா
பாடுகின்றன கடலும் நெருப்பும் 
படை வரிசை ஆகும்டா  (நீல வான ..)

சூரியனை பந்தாடி சுழல்வது தான் நாட்களாடா
ஓ ஓ ஓகோகோகோ
காரியமாய்  காற்றும் மழையும்
கடமை செய்யும் ஆட்களடா ஓகோ  (நீல வான ...)

பிறந்தவர்கள் இறந்திடவே
போட்டு வைத்தான் ஒரு சட்டம்
இறந்தவர்கள் பிழைக்க இன்னும்
இயற்றவில்லை மறு  சட்டம்  ஓகோகோ  (நீல வான ..)



Monday, September 19, 2016

எத்தனை எத்தனை இன்பமடா

எத்தனை எத்தனை இன்பமடா
இவை எல்லாம் உனக்கே சொந்தமடா
எத்தனை எத்தனை இன்பமடா
இவை எல்லாம் உனக்கே சொந்தமடா

மரம் படைத்தான்
ஒரு கொடி  படைத்தான்
அந்த மரத்தை தழுவி அதை படரவிட்டான்
படரவைத்தான்
மலர் படைத்தான்
நறுமணம் கொடுத்தான்
அதில் வடியும் தேனையும் உனக்களித்தான்
(எத்தனை )

உன்னை படைத்தான்
ஒரு பெண்ணை படைத்தான்
காதல் உறவு கொள்ளவும்
வழி வகுத்தான்
வழி வகுத்தான் 
பொன்னை  படைத்தான்
பல பொருள் படைத்தான்
இந்த பூமியில் சொர்க்கம் காண வைத்தான்
(எத்தனை )

கண் கொடுத்தான்
நீ காண்பதற்கு
பல காட்சி தந்தான் கண்டு களிப்பதற்கு
களிப்பதற்கு
மனம் கொடுத்தான் ஒன்றை நினைப்பதற்கு
நல்ல மதி கொடுத்தான்
எண்ணிப் பார்ப்பதற்கு
(எத்தனை )

ஆஹஹ ஆஹ்ஹா ஆஹாஹா
ஓஹோஹோ ஓஹோஹோ ஓஹோஹோ
ஹும் ஹும் ஹும்

https://www.youtube.com/watch?v=VU3HplCEgjM

Sunday, April 14, 2013

அழகுக்கு மறுபெயர் பெண்ணா

அழகுக்கு மறுபெயர் பெண்ணா
அல்லி  மலருக்கு  மறுபெயர் கண்ணா
தமிழுக்கு மறுபெயர் அமுதா
அதை தருகின்ற இதழ் தங்க சிமிழா
(அழகுக்கு )


நூறு கோடி பாடல் நெஞ்சில்
ஊறுகின்ற வேளையிது
ஏடு போன்ற கன்னம் கண்டு
இதழ்களாலே எழுதுவது
அந்தி பொழுதில் தொடங்கும்
அன்பு கவிதை அரங்கம்
இளமைக்கு பொருள் சொல்ல வரவா
அந்த பொருளுக்கு மறுபெயர் உறவா 
(அழகுக்கு )


நாடி நரம்பில் கோடி மின்னல்
ஓடி  பாய்ந்து மறைவதென்ன
கூந்தல் தொடங்கி பாதம் வரையில்
கைகள் கொண்டு அளப்பதென்ன
அது முதல் முதல் பாடம்
ம் ம் ம் ம்
எடுப்பதும் கொடுப்பதும் நடக்கும்
அதில் இருவருக்கும்   சரி பங்கு இருக்கும்
(அழகுக்கு )


ஆலிலை மேலே கண்ணனை போலே
நூலிடை  மேலே ஆடிடவோ
ஆடும் போது  கூடும் சுகத்தை
வார்த்தை கொண்டு கூறிடவோ 
பெண்மை மலர்ந்தே வழங்கும்
தன்னை மறந்தே மயங்கும்
விடிந்தபின் தெளிவது  தெளியும்
அது தெளிந்தபின் நடந்தது புரியும்
(அழகுக்கு )

Tuesday, December 13, 2011

அன்னமிட்டகை

அன்னமிட்ட கை நம்மை ஆக்கிவிட்ட கை
உன்னை என்னை உயர வைத்து
உலகமெல்லாம் வாழவைத்து
அன்னமிட்ட கை நம்மை ஆக்கிவிட்ட கை
உன்னை என்னை உயர வைத்து
உலகமெல்லாம் வாழவைத்து
அன்னமிட்ட கை நம்மை ஆக்கிவிட்ட கை


இல்லாமை நீக்க வேண்டும்
தொழில் ஆக்கம் வேண்டும் இங்கு
எல்லோரும் வாழ வேண்டும்
முன்னேற என்ன வேண்டும்
நல் எண்ணம் வேண்டும்
தன்  உழைப்பாலே உண்ண வேண்டும்
இல்லாமை நீக்க வேண்டும்
தொழில் ஆக்கம் வேண்டும் இங்கு
எல்லோரும் வாழ வேண்டும்
முன்னேற என்ன வேண்டும்
நல் எண்ணம் வேண்டும்
தன் உழைப்பாலே உண்ண வேண்டும்


பாடுபட்ட கை அது பாட்டாளி கை
பாடுபட்ட கை அது பாட்டாளி கை
செய்யும் தொழிலை தெய்வமாக
நிலைநிறுத்தி உடல் வருத்தி


அன்னமிட்ட கை
நம்மை ஆக்கிவிட்ட கை


பஞ்சுக்குள் நூலை எடுத்து
பட்டாடை தொடுத்து
தன் மானத்தைக் காத்திருக்க
மண்ணுக்குள் வெட்டி முடித்து
பொன் கட்டி எடுத்து
நம் தேவைக்குச் சேர்த்திருக்க
பஞ்சுக்குள் நூலை எடுத்து
பட்டாடை தொடுத்து
தன் மானத்தைக் காத்திருக்க
மண்ணுக்குள் வெட்டி முடித்து
பொன் கட்டி எடுத்து
நம் தேவைக்குச் சேர்த்திருக்க


வாழ வைக்கும் கை
அது ஏழை மக்கள் கை
வாழ வைக்கும் கை
அது ஏழை மக்கள் கை
காட்டை மேட்டைத் தோட்டமாக்கி
நாட்டு மக்கள் வாட்டம் போக்கி


அன்னமிட்ட கை
நம்மை ஆக்கிவிட்ட கை
உன்னை என்னை உயர வைத்து
உலகமெல்லாம் வாழவைத்து
அன்னமிட்ட கை
நம்மை ஆக்கிவிட்ட கை





இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்

Saturday, July 30, 2011

ஏய் மச்சான்

ஏய் மச்சான்

என் பொன்னு மச்சான்

என்னை தொடாதே

ஏய் பொண்ணு

அடி என்னா சொன்னே

வாடி முன்னாலே



கைய புடிச்சானே அய்யா கைய புடிச்சானே

காலையிலே ஒருத்தன் வந்து கையை புடிச்சானே

கைய கொடுத்தாயா நீ

கைய கொடுத்தாயா

காதலிலே கண் மயங்கி கட்டிப்புடிச்சாயா ?

கால புடிச்சானே

மெதுவா மெதுவா

ஏதோ கணக்கு வச்சு

காரியத்தோட கால புடிச்சானே

நெஞ்ச தொட்டானே

மெதுவா மெதுவா

நான் நீள  மூச்சு வாங்க வாங்க

நெஞ்ச தொட்டானே

கால குடுத்தாயா அடி நீ

காத்திருக்க மனமில்லாமே

கையில் விழுந்தாயா

நெஞ்ச தொட்டானா

அடி ஒன்

நெஞ்ச தொட்டானா

நெனைச்சி பாக்க முடியலையே

நெருங்கி தொட்டானா

ஏய் பொன்னு

நீ என்னா சொன்னே

என்னை தொடாதே



சேலை எடுத்தானே

பாவி சேலை எடுத்தானே

சேலையோடு ரவிக்கையையும் சேர்த்து எடுத்தானே

நாணங் கெட்டவளே

ஒன்னால் நாலுங் கேட்டு போகுமுன்னே

புத்தி வந்ததடி

அடி போதுமடி

ஒரு தலைமுறைக்கே புத்தி வந்ததடி

மச்சான் மச்சான் ...



கையை புடிச்சான்

வளையல் போட

கால புடிச்சான்

சலங்கை கட்ட

நெஞ்சை தொட்டான்

நோயை பார்க்க

சேலை எடுத்தான் சலவை செய்ய



அடி போடி கண்ணு

எல்லாம் தெரியுமடி எனக்கு முன்னாலே

சும்மா போக விட்டு நடிச்சேண்டி

கோபத்தை போல

அடி போடி கண்ணு

எல்லாம் தெரியுமடி எனக்கு முன்னாலே

Saturday, June 11, 2011

காமுகர் நெஞ்சில் நீதியில்லை

காமுகர் நெஞ்சில் நீதியில்லை
அவர்க்கு  தாயென்றும் தாரமென்றும்  பேதமில்லை
காமுகர் நெஞ்சில் நீதியில்லை


தீமைகள் போல் அவர்க்கு செல்வமில்லை
கொலை  செய்வதை போல் ஒரு இன்பமில்லை
மாதர்கள் வாழ்வில் காவலுமில்லை
மானமும் ஜீவனும் வாழ்வதும் இல்லை  
(காமுகர் நெஞ்சில் ..)


காவியம் போற்றுகிற வீரமெல்லாம்
வளர் காவிரி மண்டல  செல்வமன்றோ
தீரர்களாலே சீர்படும் நாடும்  
தீயவர் கால்களில் பாழ்படும் அன்றோ
(காமுகர் நெஞ்சில் ...)






 

Friday, June 10, 2011

அடக்கு மனதை அடக்கு

அடக்கு ...ம்....
அடக்கு மனதை அடக்கு
அகந்தை வழியில் அலையும்  மனதை அடக்கு
அடக்கு

ஆபத்துக்கு உதவி செய்தால்  பாவமுமில்லை
வீண் ஆணவத்தை வளர்ப்பதனால் லாபமுமில்லை
அன்புக்காக  ஏங்குவதில் கேவலமில்லை   
அதை அடுத்தவர்க்கு கொடுப்பதனால் கெடுதலுமில்லை
(அடக்கு ....)


ஒருவருக்கு ஒருவர் துணை என்பது உண்மை
இந்த உண்மையை  நீ ஒப்புக் கொண்டால்
உலகுக்கு நன்மை
பொறுமையுடன்  கருணை சேர்ந்து  
பிறப்பது  பெண்மை
இதை  புரிந்து   நடக்கும் பெண்கள் நெஞ்சம்
பாலினும் வெண்மை
(அடக்கு ...)


ஆண்கள் என்றும் பெண்கள் என்றும்
தனித்தனியாக
அந்த ஆண்டவன் ஏன் பிரித்து வைத்தான்
மிக தெளிவாக
ஜகத்தினிலே ஆணும் பெண்ணும்  ஓர் உயிராக 
இங்கே சேர்ந்து வாழும் தத்துவத்தை 
சொல்வதற்காக  
(அடக்கு ... )


Thursday, June 9, 2011

நீங்க நெனச்சா நடக்காதா




நீங்க நெனச்சா நடக்காதா

நான் நெனச்சது கெடைக்காதா

ஒரு மாதிரியா இருக்கு

அந்தி பொழுது வந்தா எனக்கு

கண் பேசுது ஜாடையிலே

பெண் வாடுது ஆசையிலே

(நீங்க நெனைச்சா )



ஆத்து நீரோடு அலையிருக்கும்

அலையை அணைத்திட கரையிருக்கும்

கரையின் ஓரத்தின் கொடியிருக்கும்

கொடியை தழுவிட செடியிருக்கும்

ஆ தனிமையில் இருக்கையில் குளிருது

எனக்கொரு துணை எங்கே

(நீங்க நெனச்சா ..)



நீலப் பூப்போட்ட சேலை கட்டி

நெத்தி நெறைய பொட்டு  வச்சேன்

காலம் பூராவும் காத்திருக்கேன்

காதல் போகாம பார்த்திருக்கேன்

ஆ அடிக்கடி துடிக்குது துவழுது

உனக்கிது புரியல்லே

(நீங்க நெனச்சா )



நேத்து நான் வச்ச சின்ன மரம்

பூத்து குலுங்குது தோட்டத்திலே

பூத்து நாளான கன்னி மரம்

காய்ச்சு கனிந்திட நேரம் வல்லே

ஆ மயக்கும் கெறக்கமும் வருகுது

இதுக்கொரு வழியென்ன

(நீங்க நெனச்சா ...)















http://www.mp3glitz.com/song-list.php?name=Kanavan&cate=MGR - Film

Wednesday, May 4, 2011

இங்கு நல்லா இருக்கணும் ...

இங்கு நல்லா இருக்கணும் எல்லோரும்
நலம் எல்லாம் இருக்கணும் எந்நாளும்
நாம ஒண்ணோடு ஒண்ணாக சேரனும்
இந்த மண்ணெல்லாம் பொன்னாக மாறனும்

ஊரும் உறவும் தொணை இருந்தா
ஒசந்து வாழலாம்
எதையும் ஒனக்கு மட்டும் சேர்த்து வச்சா
உலகம் ஏசலாம்
காத்தும் மழையும் யாருக்கும்தான்
பொதுவில் இருக்குது
அந்த கடவுளுக்கும் பொதுவுடைமை
கருத்து இருக்குது


ஏத்தம் போட்டு ஊத்து நீரை ஏறச்சது யாரு
நெலத்த ஏறு பூட்டி உழுது போட்டு வெதச்சது யாரு
சோத்து கவலை தீர்த்து வைக்க
ஒழச்சது யாரு ?
அந்த சமுதாயம் காலமெல்லாம் சிரிக்கணும் பாரு


உச்சி வெயில் சூடு பட்டு
ஒடம்பு கருத்தது
இந்த ஊருக்காக ஒழச்சு ஒழச்சு
கண்கள் சிவந்தது
கருப்பும் சிவப்பும் கலந்திருக்கிற
மேனியை பாரு
நம்ம காலம் இப்ப நடக்குதுன்னு
கூறடி கூறு

Monday, April 25, 2011

உண்மையின் சிரிப்பை ...

உண்மையின் சிரிப்பை ரசிக்கிறேன்
அதில் உலகை மறந்து சிரிக்கிறேன்
எது வந்தாலும் தாங்கிடும்
இந்த இதயம் கலங்காது
ஹஹஹா ஹஹஹா ஒஹொஹொ

சிரிப்பவரெல்லாம் மகிழ்ச்சியினாலே
சிரிப்பதும் கிடையாது
பிறரை கெடுப்பவரெல்லாம் நிரந்தரமாக
வாழ்வதும் கிடையாது
சொல்லும் செயலும் ஒன்றாய் இருந்தால்
உலகம் பழிக்காது
பெரும் தொல்லையில் சிரிக்கும்
தைரியம் இருந்தால்
துன்பங்கள் நெருங்காது
(உண்மையின் சிரிப்பை ...)


ஊர்களை கொளுத்தும் கொடியவர் செயலை
மிருகமும் செய்யாது
ஏழை குடும்பங்கள் அழுது சிந்திய கண்ணீர்
சும்மா போகாது
அடிக்கடி மாறும் மனிதர்கள் கூறும்
அறிவுரை செல்லாது
இங்கே அடைக்க வேண்டியவர் கணக்கை எடுத்தால்
சிறையே கொள்ளாது
ஹஹஹா ஹஹஹா ஓஹொ ஹோ

எது வந்தாலும் தாங்கிடும்
இந்த இதயம் கலங்காது

Saturday, February 26, 2011

ஆனந்தமாய் வாழ வேண்டுமே

மாநிலத்தின் இருள் நீங்க
வானில் வரும் ஜோதி
மன இருளும் நீங்கிடவே
அருள்வாய் நீயே

ஆனந்தமாய் வாழ வேண்டுமே
மாந்தர் ஆனந்தமாய் வாழ வேண்டுமே
நாட்டில் அமைதி சூழ
பசியும் பிணியும் வலியுமே
அகல வேண்டுமே
(ஆனந்தமாய்...)


அன்பு மார்க்கம் கண்ட அறிவின் தீபமே
மக்கள் அகத்தின் அழுக்கு என்றும் கோபதாபமே
(ஆனந்தமாய் ..)


ஒடுங்கி கிடைத்த நெஞ்சின் உணர்சசி கொஞ்சவே
உயிரை அள்ளும் பாடல் தந்த கவிதை மன்னனே
உந்தன் உள்ளம் கண்ட கனவுகளும் பலித்த வாயிலே
கல்வி அறிவு மூட்டியே
(ஆனந்தமாய் ...)


மலர்ந்த முகத்தை காட்டும் சிவந்த ரோஜாவே
சிரித்து
மலர்ந்த முகத்தை காட்டும் ரோஜாவே
உனைப் போல மலர்ந்த முகத்தை காட்டும் மாந்தர் அனைவரும்
வாழ்வில் வளமும் மிஞ்சியே

வாழ்வில்
ஆனந்தமாய் வாழ வேண்டுமே









http://www.youtube.com/watch?v=bAR2otSAdKo&NR=1

Wednesday, February 23, 2011

அன்னமிட்ட வீட்டிலே

உபகாரம் செய்தவர்க்கே
அபகாரம் செய்ய எண்ணும்
முழு மோசக்காரன்
தானே
முடிவிலே
நாசமாவான் ஆ ஆ ஆ

அன்னமிட்ட வீட்டிலே
கன்னக்கோல் சாத்தவே
எண்ணம் கொண்ட பாவிகள்
மண்ணாய் போக நேருமே

தேகம் கண்டு மயங்கியே
தீராத ஆசை கொண்டு
மோசமும் போன பின்னால்
மனவேதனை அடைவதாலே
லாபம் என்ன

பாலை ஊற்றி பாம்பை நாம்
வளர்த்தாலும் நம்மையே
கடிக்கத்தானே வரும் அதை
அடித்து கொல்ல நேருமே
(அன்னமிட்ட வீட்டிலே )


http://video.google.com/videoplay?docid=1099261662232911520#docid=-5312265452834569669

Tuesday, February 15, 2011

மனம் போல் ...

மனம் போல் வாழ்வு பெறுவோமே
இணைந்தே நேசமுடன் எந்நாளும்
நாம் மகிழ்வோம்
மெய் அன்பாலே
(மனம் போல் )


என்னுயிர் நாதன் குணமே
பாரில் நேர்மையாகினார் புவிமேல்
இந்த நாளும் வாழ்வில் சுபதினமே
இன்பமே கொள்ளுவோம்
(மனம் போல் )


பெண்மனம் ஒன்றை நினைத்தால்
அதை திண்ணமாக செய்து முடிப்பாள்
உயர் காதல் வாழ்வு பெற துடிப்பாள்
உண்மையே அன்பினால்
(மனம் போல் )

http://www.in.com/music/manthiri-kumari/songs-65127.html

Friday, November 12, 2010

நான் ஏழு வயசுலே..

இளநீ இளநீ இளநீ
நான் ஏழு வயசுலே எளனி வித்தவ
பதினேழு வயசிலே நிலைச்சு நின்னவ
ஏழை பணக்காரனுக்கும் வெறும் வேலை வெட்டிக்காரனுக்கும்
இந்த ஊருக்குள்ள யாவருக்கும்
வந்த தாகத்தை தீர்த்தவ
வாடிக்கை பிடிச்சவ
(இளநீ .....)

தேங்காயிலே பாலிருக்கும்
அத வாயார குடிச்சா சூடு தணிக்கும்
ஓடு மட்டும் தான் மேலிருக்கும்
அது கைத்தொழில் வேலைக்கு கைகொடுக்கும்
இளசானா தண்ணி இருக்கும்
முத்திப் போனா என்ன இருக்கும்
உப்பு கரிக்கும்
மக்கு பயலே
சப்புன்னு இருக்கும்
(நான் ஏழு வயசிலே ...)

இளனியிலே பலனிருக்கு
அது இருக்கிற எடத்த பொறுத்திருக்கு
இது தானே புது சரக்கு இங்கு
மத்தது எல்லாம் கடை சரக்கு
வெயில் நேரம் வேலை ஏறும்
வெலை ஏற சுவை ஏறும்
சூப்பி குடிச்சா
உள்ள தவிப்பும் மெல்ல குறையும்
இளநீ இளநீ இளநீ ...

தென்னை மரமும் பொண்ணு போல தான்
சுவை தருவதில் இரண்டும் ஒண்ணு போல
தென்னம் பாளையும் பொண்ண போல தான்
அது வெடிச்சா சிரிப்பது என்னைப் போல தான்
நல்லதுக்கு தான் பொண்ணு சிரிப்பா
பல்லை இளிச்சா ஒண்ணு குடுப்பா
தப்பு கணக்கு போட நெனச்சா
கன்னம் செவக்கும்
(நான் ஏழு வயசிலே )

இளநீ இளநீ இளநீ