உண்மையின் சிரிப்பை ரசிக்கிறேன்
அதில் உலகை மறந்து சிரிக்கிறேன்
எது வந்தாலும் தாங்கிடும்
இந்த இதயம் கலங்காது
ஹஹஹா ஹஹஹா ஒஹொஹொ
சிரிப்பவரெல்லாம் மகிழ்ச்சியினாலே
சிரிப்பதும் கிடையாது
பிறரை கெடுப்பவரெல்லாம் நிரந்தரமாக
வாழ்வதும் கிடையாது
சொல்லும் செயலும் ஒன்றாய் இருந்தால்
உலகம் பழிக்காது
பெரும் தொல்லையில் சிரிக்கும்
தைரியம் இருந்தால்
துன்பங்கள் நெருங்காது
(உண்மையின் சிரிப்பை ...)
ஊர்களை கொளுத்தும் கொடியவர் செயலை
மிருகமும் செய்யாது
ஏழை குடும்பங்கள் அழுது சிந்திய கண்ணீர்
சும்மா போகாது
அடிக்கடி மாறும் மனிதர்கள் கூறும்
அறிவுரை செல்லாது
இங்கே அடைக்க வேண்டியவர் கணக்கை எடுத்தால்
சிறையே கொள்ளாது
ஹஹஹா ஹஹஹா ஓஹொ ஹோ
எது வந்தாலும் தாங்கிடும்
இந்த இதயம் கலங்காது
Monday, April 25, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
உங்கள் வருகைக்கு நன்றி