Showing posts with label ஒளிவிளக்கு. Show all posts
Showing posts with label ஒளிவிளக்கு. Show all posts

Thursday, June 12, 2008

நான் கண்ட கனவில் நீயிருந்தாய் ...

ஜிஞ்சல...ஜல..ஜிஞ்சல...
ஜின்சல... ஜிஞ்சல...ஜல..ஜிஞ்சல...
ஜின்சல... ஜிஞ்சல...ஜல..
ஜிஞ்சல...ஜின்சல... ஜிஞ்சல...ஜல..ஜிஞ்சல...ஜின்சல...

நான் கண்ட கனவில் நீயிருந்தாய்
கனவில் எனக்கொரு சுகம் தந்தாய்
கனவும் கலைய... சுகமும் முடிய
அடுத்ததென்னவோ...ஓ...ஓ..ஒ...


அம்மம்மா எனக்கந்த சுகம் சுகம்
அப்பப்பா எப்போது வரும் வரும்
நினைத்தால் மயங்குது மனம் மனம்
உன்னைத்தான் நெருங்குது தினம் தினம்


பந்து போல எனை எடுத்து தன் பக்கம் வைத்தானோ
பகல் வருகின்ற வரையில் புரிகின்ற மொழியில்
பாடத்தைச் சொன்னானோ
ஆகட்டும் ஆகட்டும் என்றது என்மேனி
ஆனந்தம் ஆரம்பம் கண்டது பொன்மேனி

அம்மம்மா எனக்கந்த சுகம் சுகம்
அப்பப்பா எப்போது வரும் வரும்
நினைத்தால் மயங்குது மனம்
மனம் உன்னைத்தான் நெருங்குது தினம் தினம்

என்னவேண்டும் என்று நினைத்து என் நெஞ்சைத்தொட்டானோ
இவள் மயக்கத்தில் கொஞ்சம் மிதக்கட்டும்
என்று முத்திரை இட்டானோ
ஏ. .மிஸ்டர் ஏ...மிஸ்டர்
உனக்கிது கிட்டாது
ஓ...மிஸ்டர் ஓ...மிஸ்டர் கைகளுக்கெட்டாது

அம்மம்மா எனக்கந்த சுகம் சுகம்
அப்பப்பா எப்போது வரும் வரும்
நினைத்தால் மயங்குது மனம் மனம்
உன்னைத்தான் நெருங்குது தினம் தினம் ய...ய...ய...

நான் கண்ட கனவில் நீயிருந்தாய்
கனவில் எனக்கொரு சுகம் தந்தாய்
கனவும் கலைய... சுகமும் முடிய
அடுத்ததென்னவோ...ஓ...ஓ..ஒ

Wednesday, June 4, 2008

தைரியமாகச் சொல் நீ ....


தைரியமாக சொல் நீ மனிதன் தானா?
மனிதன் தானா?
இல்லை!
நீ தான் ஒரு மிருகம் -
இந்த மதுவில் விழும் நேரம்
மனமும் நல்ல குணமும்
உன் நினைவை விட்டு விலகும்
நீ தான் ஒரு மிருகம் -
இந்த மதுவில் விழும் நேரம்

மானை போல் மானம் என்றாய்-
நடையில் மத யானை நீயே என்றாய்
வேங்கை போல் வீரம் என்றாய்-
அறிவில் உயர்வாக சொல்லிக் கொண்டாய்
மதுவால் விலங்கினும் கீழாய் நின்றாய்

தைரியமாக சொல் நீ
மனிதன் தானா மனிதன் தானா

அலையாடும் கடலை கண்டாய்
குடித்து பழகாமல் ஆடக் கண்டாய்
மலராடும் கொடியை கண்டாய்
மதுவை பருகாமல் ஆடக் கண்டாய்
நீயோ மதுவாலே ஆட்டம் கண்டாய்

தைரியமாக சொல் நீ
மனிதன் தானா மனிதன் தானா

பொருள் வேண்டிதிருடச் செல்வாய்
பெண்ணை பெறவேண்டி விலையை சொல்வாய்
துணிவோடு உயிரை கொல்வாய்
எதற்கும் துணையாக மதுவை கொள்வாய்
கேட்டால் நான்தானே மனிதன் என்பாய்

தைரியமாக சொல் நீ
மனிதன் தானா -இல்லை மனிதன் தானா
நீ தான் ஒரு மிருகம்
இந்த மதுவில் விழும் நேரம்

Thursday, May 29, 2008

ருக்மணியே பற பற பற ...

ருக்மணியே பற பற பற
சக்கர பெண்ணே பற பற பற
முத்து மொழியே பற பற பற
சித்திர கண்ணே பற பற பற
யார் யாரோ உன்னை தேடுவாரோ

செம்மாதுளையில் கொஞ்சம் பொன் மாங்கனியில் கொஞ்சம்
செம்மாதுளையில் கொஞ்சம் பொன் மாங்கனியில் கொஞ்சம்
சுவை பிழிந்து தந்தானே
அதை மறந்து போவாயோ
சுவை பிழிந்து தந்தானே
அதை மறந்து போவாயோ
நான் கொடுத்த முத்தத்தில் தேன் கசந்து போகாதோ


(ich - please once again)

(ருக்மணியே பற பற பற )

உன் ஒருத்தியைதானே நினைவில் நிறுத்தி வைத்தேனே
உன் ஒருத்தியைதானே நினைவில் நிறுத்தி வைத்தேனே
அன்று நடந்தைதானே இன்று நினைத்து வந்தனே
அன்று நடந்தைதானே இன்று நினைத்து வந்தனே
ஊர் மயங்கி நின்றாலும் நான் தெளிந்து நின்றேனே

(look at me)

(ருக்மணியே பற பற பற )
தேடினேனே உன்னை தேடினேனே
என்னை போலே நூறு பெண்கள் ஊரில் இல்லையோ
என் கண்ணை போல வண்ண மீன்கள் நீரில் இல்லையோ
ஒன்று போல ஒன்று உலகில் காண்பது உண்டு
பாலில் உள்ள வெண்ணிறம்
எந்தன் கண்ணில் இல்லையோ
பொன்னை போல மேனி கொண்ட பூவை அல்லவோ
சிறு பூவை போல மென்மை கொண்ட பாவை அல்லவோ
எங்கு சென்ற போதும் இதயம் வந்து தேடும்
ஊர் அறிந்த உண்மை சொல்ல நாணம் என்னவோ

(ருக்மணியே பற பற பற )

Friday, May 16, 2008

இறைவா உன் மாளிகையில் ....

இறைவா உன் மாளிகையில்
எத்தனையோ மணி விளக்கு
தலைவா உன் காலடியில்
என் நம்பிக்கையின் ஒளி விளக்கு
நம்பிக்கையின் ஒளி விளக்கு


ஆண்டவனே உன் பாதங்களை
நான்கண்ணீரில் நீராட்டினேன்
இந்த ஓருயிரை நீ வாழ வைக்க
இன்று உன்னிடம் கையேந்தினேன்..முருகையா...
(ஆண்டவனே)


பன்னிரண்டு கண்களிலே ஒன்றிரண்டு மலர்ந்தாலும்
என்னிரண்டு கண்களிலும் இன்ப ஒளி உண்டாகும்
உள்ளமது உள்ளவரை அள்ளித் தரும் நல்லவரை
விண்ணுலகம் வாவென்றால் மண்ணுலகம் என்னாகும்
(ஆண்டவனே)


மேகங்கள் கண் கலங்கும் மின்னல் வந்து துடி துடிக்கும்
வானகமே உருகாதோ வள்ளல் முகம் பாராமல்
உன்னுடனே வருகின்றேன் என் உயிரைத் தருகின்றேன்
மன்னன் உயிர் போகாமல்
இறைவா நீ ஆணையிடு
இறைவா நீ ஆணையிடு.....ஆணையிடு
இறைவா....இறைவா....இறைவா....

Wednesday, May 14, 2008

நாங்க புதுசா .....




நாங்க புதுசா ...
நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க
நல்ல பாட்டு படிக்கும் வானம் பாடிதானுங்க
நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க
நல்ல பாட்டு படிக்கும் வானம் பாடிதானுங்க

டமுக்கடிப்பா டீயாலோ
தமுக்கடிப்பான் ஹாயாலோ
டமுக்கடிப்பா டீயாலோ
தமுக்கடிப்பான் ஹாயாலோ
ஏ .. சிங்கி ............ ஏ ... சிங்கா
ஏ.. சிங்கி...............ஏ .... சிங்கா

கண்ணாலே ரகசியம் பேசிக்கிட்டோம்
நாங்க ரெண்டு பேரும் காதல் வலை வீசிப்புட்டோம்
சிக்கனமா கண்ணாலம் முடிச்சிக்கிட்டோம்
அதை சீர்திருத்த முறையில நடத்திப்புட்டோம்

பெத்தாலும் ஒண்ணு ரெண்டு பெத்துபோடுவோம்
அதுக்கு ஒத்துமைய ரெண்டு பேரும் பாடுபடுவோம்
ஊதாரி புள்ளைகளை பெக்க மாட்டோம்
அது ஊரு வம்பை வாங்கும் படி வைக்க மாட்டோம்


நாங்க புதுசா ...
நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க
நல்ல பாட்டு படிக்கும் வானம் பாடிதானுங்க

ஊரு விட்டு ஊரு மாறி போவோமுங்க
ஆனா உங்களை போல் பேரு கெட்டு போகமாட்டோம்
எல்லோர்க்கும் நல்லவரா இருப்போமுங்க
எங்க கொள்கையில என்னாளும் மாறமாட்டோம்
நரி கொம்பு வித்தாலும் விப்போமுங்க
ஆனா நரி போல வஞ்சனைகள் செய்யமாட்டோம்
பாசி மணி ஊசி எல்லாம் விப்போமுங்க
ஆனா காசுக்காக மானத்தையே விக்கமாட்டோம்


நாங்க .. புய்ஷா...ஆ.
நாங்க புதுசா கட்டிகிட்ட ஜோடிதானுங்க
நல்ல பாட்டு படிக்கும் வானம்பாடி தானுங்க

படி அரிசி கிடைக்கிற காலத்துல
நாங்க படியேறி பிச்சை கேட்க போவதில்லே
குடிசையெல்லாம் வீடாகும் நேரத்துலே
நாங்க தெருவோரம் குடியேற தேவையில்லே
சர்க்காரு ஏழை பக்கம் இருக்கையிலே
நாங்க சட்டதிட்டம் மீறி இங்கே நடப்பதில்லே
எல்லோரும் ஒண்ணாக நினைக்கையிலே
நாங்க எதையும் எப்பவும் இங்கே மறைப்பதில்லே

நாங்க புதுசா ....
நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க
நல்ல பாட்டு படிக்கும் வானம் பாடிதானுங்க
ஹ புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க
நல்ல பாட்டு படிக்கும் வானம் பாடிதானுங்க
டமுக்கடிப்பா டீயாலோ தமுக்கடிப்பான் ஹாயாலோ
டமுக்கடிப்பா டீயாலோ தமுக்கடிப்பான் ஹாயாலோ
டமுக்கடிப்பா டீயாலோ தமுக்கடிப்பான் ஹாயாலோ
டமுக்கடிப்பா டீயாலோ தமுக்கடிப்பான் ஹாயாலோ
ஏ .. சிங்கி ............ ஏ ... சிங்கா ஏ.. சிங்கி...............ஏ .... சிங்கா
Print