Showing posts with label காவல்காரன். Show all posts
Showing posts with label காவல்காரன். Show all posts

Monday, June 2, 2008

அடங்கொப்புரான சத்தியமா ....

அடங்கொப்பூராண சத்தியமா நான் காவல்காரேன் அடங்கொப்பூராண சத்தியமா நான் காவல்காரேன் நீ ஒப்புகொள்ள மறுத்தாலும் நான் காவல்காரேன் அடங்கொப்பூராண சத்தியமா நான் காவல்காரேன் நீ ஒப்புகொள்ள மறுத்தாலும் நான் காவல்காரேன்

பட்டம் இருந்தாலும் ரொக்கம் இருந்தாலும் கற்பை அது காக்குமோ பட்டம் இருந்தாலும் ரொக்கம் இருந்தாலும் கற்பை அது காக்குமோ
உன்னை தொட்டு முடி போட்டு ஒட்டி உறவாடும்
துணைவன் போல் ஆகுமோ
உன்னை தொட்டு முடி போட்டு ஒட்டி உறவாடும்
துணைவன் போல் ஆகுமோ
இந்த துணைவன் போல் ஆகுமோ

அடங்கொப்பூராண சத்தியமா நான் காவல்காரேன் நீ ஒப்புகொள்ள மறுத்தாலும் நான் காவல்காரேன்

பெண்மை கொடி மீது கண்கள் படும் போது உன் காவல் தான் அடியோ
பெண்மை கொடி மீது கண்கள் படும் போது உன் காவல் தான் அடியோ
உன் பட்டு தளிர் மேனி முற்றும் ரசிக்கின்ற மெய்க் காவல் நான் அடியோ
உன் பட்டு தளிர்மேனி முற்றும் ரசிக்கின்ற மெய்க் காவல் நான் அடியோ
என்றும் மெய்க் காவல் நான் அடியோ

அடங்கொப்பூராண சத்தியமா நான் காவல்காரேன்
நீ ஒப்புகொள்ள மறுத்தாலும் நான் காவல்காரேன்

அன்னை முதற் காவல் தந்தை மறு காவல்
ஆரம்ப காவல் அடி
என் உள்ளம் கவர்ந்தாலும் இல்லம் புகுந்தாலும்
நான் தான் காவல் அடி
என்றும் நான் தான் காவல் அடி

அடங்கொப்பூராண சத்தியமா நான் காவல்காரேன்
நீ ஒப்புகொள்ள மறுத்தாலும் நான் காவல்காரேன்

காது கொடுத்துக் கேட்டேன் ....

காது கொடுத்து கேட்டேன்
ஆஹா குவா குவா சத்தம்
காது கொடுத்து கேட்டேன்
ஆஹா குவா குவா சத்தம்
இனி கணவனுக்கு கிட்டாது
அவள் குழந்தைக்கு தான்
இச் இச் இச் இச்
இனி கணவனுக்கு கிட்டாது
அவள் குழந்தைக்கு தான் முத்தம்
காது கொடுத்து கேட்டேன்
ஆஹா குவா குவா சத்தம்

கட்டில் போட்ட இடத்தினிலே தொட்டில் போட்டு வைப்பாளோ
கட்டில் போட்ட இடத்தினிலே தொட்டில் போட்டு வைப்பாளோ
கடமையிலே காதல் நெஞ்சை கட்டி போட்டு வைப்பாளோ
கடமையிலே காதல் நெஞ்சை கட்டி போட்டு வைப்பாளோ
இருவருக்கும் இடையினிலே பிள்ளை வந்து படுப்பானோ
உன்னை ரகசியமாய் தொடும்போது குரல் கொடுத்து விழிப்பானோ
(காது கொடுத்து கேட்டேன் )

ஓராம் மாசம் உடல் அது தளரும்
ஈராம் மாசம் இடை அது மெலியும்
மூணாம் மாசம் முகம் அது வெளுக்கும்
நாலாம் மாசம் நடந்தா இறைக்கும்
மாங்காய் இனிக்கும் சாம்பல் ருசிக்கும்
மசக்கையினாலே அடிக்கடி மயக்கம்
சுமந்தவள் தவிக்கும் மாசங்கள் பத்து
சிப்பியின் வயிற்றில் இருப்பது முத்து
ஆரீ ரா ரோ ...ஆரீ ரா ரோ .. ...
(காது கொடுத்து கேட்டேன்)

குழந்தை பாரம் உனக்கல்லவோ
குடும்ப பாரம் எனக்கல்லவோ
கொடியிடையின் பாரம் எல்லாம்
பத்து மாத கணக்கல்லவோ
மனைவியுடன் குழந்தையையும்
ஒருவனாக சுமக்கின்றேன்
சுமப்பது தான் சுகம் என்று
மனதுக்குள்ளே ரசிக்கின்றேன்


காது கொடுத்து கேட்டேன்
ஆஹா குவா குவா சத்தம்
இனி கணவனுக்கு கிட்டாது
அவள் குழந்தைக்கு தான் முத்தம்.

 (விடுபட்ட பாடல்  வரிகளை கொடுத்து உதவிய  டி .எஸ் .கந்தசாமிக்கு அவர்களுக்கு என் நன்றி ) 

Sunday, May 18, 2008

மெல்லப் போ ...


மெல்லப் போ மெல்லப் போமெல்லிடையாளே மேள்ளப்பூ
சொல்லிப் போ சொல்லிப் போ
சொல்வதைக் கண்ணால்சொல்லிப் போ மல்லிகையே
(மெல்லப் போ)


ஓடையில் நீரலை மேடையில்
தென்றலின் நாடகம் எத்தனை ஆயிரம்
தொட்டில் கட்டிப் பாடும் பூங்கொடி
பள்ளி கொள்ளத் தோன்றும் பைங்கிளி
அந்தி மாலையில் இந்த சோலையேசொர்க்கமாகுமோ


மெல்லத் தான் மெல்லத் தான் மயங்கி நடந்தாள் மாது
சொல்லத்தான் சொல்லத்தான்தயங்கி வரைந்தாள்
தூதுஇப்பொழுதே..
(மெல்லப் போ)


செம்மாங்கனி புன்னகை நல்லோவியம் -
செவ்விதழ்தேன்மாதுளை பொன்மொழி சொல்லோவியம்
சிந்து நடை போடும் பாற்குடம்
சின்ன விழிப் பார்வை பூச்சரம்
என்ன மேனியோ இன்னும் பாடவோ
தமிழ் தேடவோ
(மெல்லப் போ)


பொன்னெழில் தாமரைப் பூவினாள் -
மன்னவன்கண்விழி பொய்கையில் மேவினாள்
தொட்டில் கட்டிப் பாடும் பூங்குயில்
முத்தம் ஒன்று வேண்டும் ஆண் குயில்
அந்தப் பாடலில் அன்பு ஊடலில் மங்கை மாறினாள்
(மெல்ல்ப் போ)

Saturday, May 17, 2008

கட்டழகு தங்கமகள் ......

கட்டழகுத் தங்க மகள் திரு நாளோ -
அவள்கிட்ட வந்து கட்டி முத்தம் தருவாளோ
வெட்டி வைத்த செங்கரும்பை எடுப்பாளோ -
அதைவெல்லத் தமிழ் சொல்லாகக் கொடுப்பாளோ
பட்டுக் கன்னம் செல்லம் கொஞ்சச் சிரிப்பாளோ -
அதில்பங்கு கொள்ள தோழியரை அழைப்பாளோ
(கட்டழகு)


அன்பிருக்கும் நெஞ்சம் ஒரு ஆலயமோ -
அதில்ஆசையும் பாசமும் காவியமோ
அன்னை தெய்வத்தின் நற்சீதனமோ -
என்கண்களில் நீ தரும் தரிசனமோ
(கட்டழகு)


பொங்கு கடல் மடிதனில் நிலவாட -
அதில்தங்கை முகம் துள்ளி துள்ளி சதிராட
அங்கம் என்ற மலரில் உயிராட -
அன்புஎங்கிருந்தபோதிலும் புகழ் பாட
(கட்டழகு)

Friday, May 9, 2008

நினைத்தேன் வந்தாய் .....

நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது
நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது

நூறு நிலாவை ஒரு நிலவாக்கி பாவை என்று
ஆயிரம் மலரை ஒரு மலராக்கி பார்வை என்று
கண் மீனாக மானாக நின்றாடவோ
பொன் தேனாக பாலாக பண்பாடவோ
மாலை நேரம் வந்து உறவாடவோ
ஓ ஓ ஓ ஓ ஓ ஓய்யா..

நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது


நிலைக்கண்ணாடி கன்னம் கண்டு ஆஹா
மலர்கள்ளூரும் கிண்ணம் என்று ஓஹோ
அது சிந்தாமல் கொள்ளாமல் பக்கம் வா
அன்பு தேனோடை பாய்கின்ற சொர்கம் வா
அது சிந்தாமல் கொள்ளாமல் பக்கம் வா
அன்பு தேனோடை பாய்கின்ற சொர்கம் வா

மன்னன் தோளோடு அள்ளிக் கொஞ்சும் கிள்ளை
அவன் தேரோடு பின்னிச் செல்லும் முல்லை
உன்னை நெஞ்சென்ற மஞ்சத்தில் சந்தித்தேன்
உந்தன் கை கொண்டு உண்ணாத கன்னித்தேன்
உன்னை நெஞ்சென்ற மஞ்சத்தில் சந்தித்தேன்
உந்தன் கை கொண்டு உண்ணாத கன்னித்தேன்

நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது


இடை நூலாடி செல்ல செல்ல ஆஹா
அதை மேலாடை மூடிக்கொள்ள ஓஹோ
சின்ன பூமேனி காணாத கண்ணென்ன
சொல்லித் தீராத இன்பங்கள் என்னென்ன
சின்ன பூமேனி காணாத கண்ணென்ன
சொல்லித் தீராத இன்பங்கள் என்னென்ன