இங்கு நல்லா இருக்கணும் எல்லோரும்
நலம் எல்லாம் இருக்கணும் எந்நாளும்
நாம ஒண்ணோடு ஒண்ணாக சேரனும்
இந்த மண்ணெல்லாம் பொன்னாக மாறனும்
ஊரும் உறவும் தொணை இருந்தா
ஒசந்து வாழலாம்
எதையும் ஒனக்கு மட்டும் சேர்த்து வச்சா
உலகம் ஏசலாம்
காத்தும் மழையும் யாருக்கும்தான்
பொதுவில் இருக்குது
அந்த கடவுளுக்கும் பொதுவுடைமை
கருத்து இருக்குது
ஏத்தம் போட்டு ஊத்து நீரை ஏறச்சது யாரு
நெலத்த ஏறு பூட்டி உழுது போட்டு வெதச்சது யாரு
சோத்து கவலை தீர்த்து வைக்க
ஒழச்சது யாரு ?
அந்த சமுதாயம் காலமெல்லாம் சிரிக்கணும் பாரு
உச்சி வெயில் சூடு பட்டு
ஒடம்பு கருத்தது
இந்த ஊருக்காக ஒழச்சு ஒழச்சு
கண்கள் சிவந்தது
கருப்பும் சிவப்பும் கலந்திருக்கிற
மேனியை பாரு
நம்ம காலம் இப்ப நடக்குதுன்னு
கூறடி கூறு
Wednesday, May 4, 2011
இங்கு நல்லா இருக்கணும் ...
திரைப்படம்
ஒரு தாய் மக்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
உங்கள் வருகைக்கு நன்றி