Tuesday, December 13, 2011

அன்னமிட்டகை

அன்னமிட்ட கை நம்மை ஆக்கிவிட்ட கை
உன்னை என்னை உயர வைத்து
உலகமெல்லாம் வாழவைத்து
அன்னமிட்ட கை நம்மை ஆக்கிவிட்ட கை
உன்னை என்னை உயர வைத்து
உலகமெல்லாம் வாழவைத்து
அன்னமிட்ட கை நம்மை ஆக்கிவிட்ட கை


இல்லாமை நீக்க வேண்டும்
தொழில் ஆக்கம் வேண்டும் இங்கு
எல்லோரும் வாழ வேண்டும்
முன்னேற என்ன வேண்டும்
நல் எண்ணம் வேண்டும்
தன்  உழைப்பாலே உண்ண வேண்டும்
இல்லாமை நீக்க வேண்டும்
தொழில் ஆக்கம் வேண்டும் இங்கு
எல்லோரும் வாழ வேண்டும்
முன்னேற என்ன வேண்டும்
நல் எண்ணம் வேண்டும்
தன் உழைப்பாலே உண்ண வேண்டும்


பாடுபட்ட கை அது பாட்டாளி கை
பாடுபட்ட கை அது பாட்டாளி கை
செய்யும் தொழிலை தெய்வமாக
நிலைநிறுத்தி உடல் வருத்தி


அன்னமிட்ட கை
நம்மை ஆக்கிவிட்ட கை


பஞ்சுக்குள் நூலை எடுத்து
பட்டாடை தொடுத்து
தன் மானத்தைக் காத்திருக்க
மண்ணுக்குள் வெட்டி முடித்து
பொன் கட்டி எடுத்து
நம் தேவைக்குச் சேர்த்திருக்க
பஞ்சுக்குள் நூலை எடுத்து
பட்டாடை தொடுத்து
தன் மானத்தைக் காத்திருக்க
மண்ணுக்குள் வெட்டி முடித்து
பொன் கட்டி எடுத்து
நம் தேவைக்குச் சேர்த்திருக்க


வாழ வைக்கும் கை
அது ஏழை மக்கள் கை
வாழ வைக்கும் கை
அது ஏழை மக்கள் கை
காட்டை மேட்டைத் தோட்டமாக்கி
நாட்டு மக்கள் வாட்டம் போக்கி


அன்னமிட்ட கை
நம்மை ஆக்கிவிட்ட கை
உன்னை என்னை உயர வைத்து
உலகமெல்லாம் வாழவைத்து
அன்னமிட்ட கை
நம்மை ஆக்கிவிட்ட கை





இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்

4 comments:

பால கணேஷ் said...

இல்லாமை நீங்க வேண்டும். இங்கு எல்லோரும் வாழ வேண்டும். -அடடா... மற்றவர்களுக்காகப் பாடியதும், நல்ல விஷயங்களை அறிவுரைத்தவரும் ஆக புரட்சித்தலைவர் போல அவனியில் யாரும் உண்டோ? அருமையான இந்தப் பாடலை மீண்டும் மனக்கண்ணில் பார்த்து மகிழ்ந்தேன். நன்றி!

பூங்குழலி said...

இத்தகைய பாடல்களால் தான் அவர் இன்னமும் மக்கள் திலகமாக போற்றப்படுகிறார்

TSK said...

மிகவும் ஒரு நல்ல பணி.
வாழ்த்துக்கள்.
ஒரு சின்ன யோசனை.
ஒவ்வொரு பாடல் வரிகள் முடிந்த பின்பு கீழ்கண்ட தகவல்களையும்
தந்தீர்கள் என்றால் நூற்றுக்கு நூறு MGR பாடல்கள் தந்த பெருமை உங்களை சேரும். நிச்சயம் தருவீர்கள் என்று நம்புகிறேன்.

தர வேண்டிய தகவலகள்:-
படம் வெளிவந்த நாள், மாதம், ஆண்டு;
இசை;
பாடல் இயற்றியவர்;
பாடியவர்;
பாடல் காட்சியில் MGR உடன் நடித்தவர்களின் பெயர்கள்.

பூங்குழலி said...

மிக்க நன்றி திரு கந்தசாமி .எல்லா பாடல்களுக்கும் அவ்வாறு செய்ய இயலுமா என தெரியவில்லை எனினும் முயல்கிறேன் .மீண்டும் நன்றி உங்கள் வருகைக்கும் ஆலோசனைக்கும்

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி