ஏய் மச்சான்
என் பொன்னு மச்சான்
என்னை தொடாதே
ஏய் பொண்ணு
அடி என்னா சொன்னே
வாடி முன்னாலே
கைய புடிச்சானே அய்யா கைய புடிச்சானே
காலையிலே ஒருத்தன் வந்து கையை புடிச்சானே
கைய கொடுத்தாயா நீ
கைய கொடுத்தாயா
காதலிலே கண் மயங்கி கட்டிப்புடிச்சாயா ?
கால புடிச்சானே
மெதுவா மெதுவா
ஏதோ கணக்கு வச்சு
காரியத்தோட கால புடிச்சானே
நெஞ்ச தொட்டானே
மெதுவா மெதுவா
நான் நீள மூச்சு வாங்க வாங்க
நெஞ்ச தொட்டானே
கால குடுத்தாயா அடி நீ
காத்திருக்க மனமில்லாமே
கையில் விழுந்தாயா
நெஞ்ச தொட்டானா
அடி ஒன்
நெஞ்ச தொட்டானா
நெனைச்சி பாக்க முடியலையே
நெருங்கி தொட்டானா
ஏய் பொன்னு
நீ என்னா சொன்னே
என்னை தொடாதே
சேலை எடுத்தானே
பாவி சேலை எடுத்தானே
சேலையோடு ரவிக்கையையும் சேர்த்து எடுத்தானே
நாணங் கெட்டவளே
ஒன்னால் நாலுங் கேட்டு போகுமுன்னே
புத்தி வந்ததடி
அடி போதுமடி
ஒரு தலைமுறைக்கே புத்தி வந்ததடி
மச்சான் மச்சான் ...
கையை புடிச்சான்
வளையல் போட
கால புடிச்சான்
சலங்கை கட்ட
நெஞ்சை தொட்டான்
நோயை பார்க்க
சேலை எடுத்தான் சலவை செய்ய
அடி போடி கண்ணு
எல்லாம் தெரியுமடி எனக்கு முன்னாலே
சும்மா போக விட்டு நடிச்சேண்டி
கோபத்தை போல
அடி போடி கண்ணு
எல்லாம் தெரியுமடி எனக்கு முன்னாலே
2 comments:
ஏங்க...பூங்குழலி, நீங்க தீவிர எம்ஜிஆர் பக்தரா...?
பக்தரெல்லாம் இல்லை ..தீவிர ரசிகைன்னு சொல்லலாம்
Post a Comment
உங்கள் வருகைக்கு நன்றி