Showing posts with label எங்க வீட்டு பிள்ளை. Show all posts
Showing posts with label எங்க வீட்டு பிள்ளை. Show all posts

Monday, June 2, 2008

நான் ஆணையிட்டால் ....


நான் ஆணையிட்டால்...
அது நடந்து விட்டால்...
நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்
இங்கு ஏழைகள் வேதனைப் படமாட்டார்
உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை
அவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார் (2)
(நான் ஆணையிட்டால்)

ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால்
அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்
உடல் உழைக்கச் சொல்வேன்
அதில் பிழைக்கச் சொல்வேன்
அவர் உரிமைப் பொருள்களைத் தோடமாட்டேன் (2)
(நான் ஆணையிட்டால்)

சிலர் ஆசைக்கும் தேவைக்கும்
வாழ்விற்கும் வசதிக்கும்
ஊரார் கால்பிடிப்பார்
ஒரு மானமில்லை அதில் ஈனமில்லை
அவர் எப்போதும் வால்பிடிப்பார்
முன்பு யேசு வந்தார் பின்பு காந்தி வந்தார்
இந்த மானிடர் திருந்திட பிறந்தார்
இவர் திருந்தவில்லை மனம் வருந்தவில்லை
அந்த மேலோர் சொன்னதை மறந்தார்
அந்த மேலோர் சொன்னதை மறந்தார்
(நான் ஆணையிட்டால்)

இங்கு ஊமைகள் ஏங்கவும் உண்மைகள் தூங்கவும்
நானா பார்த்திருப்பேன்
ஒரு கடவுள் உண்டு அவர் கொள்கை உண்டு
அதை எப்போதும் காத்திருப்பேன்
எதிர்காலம் வரும் என் கடமை வரும்
இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பபேன்
பொது நீதியிலே புதுப் பாதையிலே
வரும் நல்லோர் முகத்திலே விழிப்பேன்
வரும் நல்லோர் முகத்திலே விழிப்பேன்
(நான் ஆணையிட்டால்)




Friday, May 23, 2008

நான் மாந்தோப்பில் ....

நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்
அவன் மாம்பழம் வேண்டுமென்றான்
அதை கொடுத்தாலும் வாங்கவில்லை
இந்த கன்னம் வேண்டுமென்றான் !!

நான் தண்ணீர்(ப்) பந்தலில் நின்றிருந்தேன்
அவள் தாகம் என்று சொன்னாள் !
நான் தன்னந்தனியாக நின்றிருந்தேன்
அவள் மோகம் என்று சொன்னாள் !!


ஒன்று கேட்டால் என்ன ? கொடுத்தால் என்ன ?
குறைந்தா போய் விடும் என்றான் !
கொஞ்சம் பார்த்தால் என்ன ? பொறுத்தால் என்ன ?
மறந்தா போய்விடும் என்றாள் ! ((நான்))

அவன் தாலி காட்டும் முன்னாலே தொட்டாலே போதும்
என்றே துடி துடிச்சான்
அவள் வேலிகட்டும் முன்னாலே வெள்ளாமை ஏது ?
என்றே கதை படிச்சா !!
அவன் காதலுக்கு பின்னாலே கல்யாணம் வருமே
என்றே கையடிச்சான் !!
அவள் ஆகட்டும் என்றே ஆசையில் நின்றே
அத்தானின் காதை(க்) கடிச்சா ! ((நான்))

அவன் பூவிருக்கும் தேனெடுக்க பின்னாலே வந்து
வண்டாய் சிறகடிச்சான் !!
அவள் தேனெடுக்க வட்டமிடும் மச்சானை பிடிக்க
கண்ணாலே வலை விரிச்சா !!
அவன் ஜோடிகுயில் பாடுவதை சொல்லாமல் சொல்லி
மெதுவா அணைச்சுக்கிட்டான் !!
அவள் ஆடியிலே பெண்ணாகி அஞ்சாறு மாசத்துல
அழகா(த்) தெரிஞ்சு(க்) கிட்டா !! ((நான்))

கண்களும் காவடிச் ...

கண்களும் காவடி சிந்தாகட்டும்
காளையர் நெஞ்சத்தை பந்தாடட்டும்
கண்களும் காவடி சிந்தாகட்டும்
காளையர் நெஞ்சத்தை பந்தாடட்டும்
பெண்மையும் ஆண்மையும் ஒன்றாகட்டும்
பேரின்ப வாசலில் நின்றாடட்டும்
கண்களும் காவடி சிந்தாகட்டும்
காளையர் நெஞ்சத்தை பந்தாடட்டும்

உள்ளங்கள் நேரான வழி காணட்டும்
உறுதியிலே துன்பம் தூளாகட்டும்
உள்ளங்கள் நேரான வழி காணட்டும்
உறுதியிலே துன்பம் தூளாகட்டும்
நன்மையே உன் வாழ்வில் தொழிலாகட்டும்
நாடெல்லாம் உன்னை கண்டு புகழ் பாடட்டும்
நாடெல்லாம் உன்னை கண்டு புகழ் பாடட்டும்


ஆஅஹ்ஹாஅ..ஆஹ்ஹ்...ஆஹ்ஹாஅ...
ஊஹ்ஹ்ஹ்...ஊஹ்ஹ்..ஆஅஹ்ஹ்...ஆஹ்ஹ்ஹ்.. கண்களும் காவடி சிந்தாகட்டும்
காளையர் நெஞ்சத்தை பந்தாடட்டும்

மண்ணகமெல்லாம் நதி பாயட்டும்
மார்கழி துதி பாடி கதிர் சாயட்டும்
கதிர் சாயட்டும் கதிர் சாயட்டும்
என்ன செய்வோம் என்ற நிலை மாறட்டும்
உன்னாலே மக்கள் எண்ணம் நிறைவேறட்டும்
உன்னாலே மக்கள் எண்ணம் நிறைவேறட்டும்

கண்களும் காவடி சிந்தாகட்டும்
காளையர் நெஞ்சத்தை பந்தாடட்டும்


தூங்கிய காலங்கள் முடிவாகட்டும்
தோள்களிலே வீரம் நடை போடட்டும்
நடை போடட்டும் வீரம் நடை போடட்டும்
கொள்கயிலே அன்பு ஒளி வீசட்டும்
கோழையும் உன்னாலே புலி ஆகட்டும்
கோழையும் உன்னாலே புலி ஆகட்டும்

கண்களும் காவடி சிந்தாகட்டும்
காளையர் நெஞ்சத்தை பந்தாடட்டும்
பெண்மையும் ஆண்மையும் ஒன்றாகட்டும்
பேரின்ப வாசலில் நின்றாடட்டும்

Tuesday, May 20, 2008

பெண் போனால் .....

பெண் போனாள்...இந்த பெண் போனால்
இவள் பின்னாலே என் கண் போகும்
வந்தாயோ கூட வந்தாயோ
முன்பு இல்லாத சுகம் தந்தாயோ


பாதி நிலாவை விண்ணில் வைத்து
மீதி நிலாவை மண்ணில் வைத்து
மண்ணில் வைத்ததை மங்கை
உனதுகண்ணில் வைத்தானோ... கண்ணில் வைத்தானோ


ஆயிரம் பூவை அள்ளி எடுத்து
அள்ளி எடுத்ததை கிள்ளி எடுத்து
கொஞ்சம் கொஞ்சமாய் தேனை எடுத்து
நெஞ்சில் வைத்தானோ ... நெஞ்சில் வைத்தானோ
(பெண்)


வானவில் பெண்ணாய் வந்ததென்று
வார்த்தையில் போதை தந்ததென்று
அன்னம் நடந்தாள் ஆடிக் கிடந்தாள்
இன்னும் சொல்லவோ... இன்னும் சொல்லவோ


காதலன் பேரை சொல்லிக்கொண்டு
காத்திருந்தாளாம் அல்லித்தண்டு
தென்றல் அடிக்க தாவி அணைக்க
என்ன சுகமோ... என்ன சுகமோ..
(பெண்)

Sunday, May 18, 2008

மலருக்கு தென்றல் ....

வானகமே வையகமே வளர்ந்து வரும் தாயினமே
ஆணுலக மேடையிலேஆசை நடை போடாதே ..
ஆசை நடை போடாதே


மலருக்குத் தென்றல் பகையானால்
அது மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு
மலருக்குத் தென்றல் பகையானால்
அது மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு
நிலவுக்கு வானம் பகையானால்
அது நடந்திட வேறே வழி ஏது
மலருக்குத் தென்றல் பகையானால்
அது மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு


பறவைக்குச் சிறகு பகையானால்
அது பதுங்கி வாழ்ந்திடக் கால்களுண்டு
பறவைக்குச் சிறகு பகையானால்
அது பதுங்கி வாழ்ந்திடக் கால்களுண்டு
உறவுக்கு நெஞ்சே பகையானால்
மண்ணில் உயிரினம் பெருகிட வகை ஏது
நிலவுக்கு வானம் பகையானால்
அது நடந்திட வேறே வழி ஏது
மலருக்குத் தென்றல் பகையானால்
அது மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு


படகுக்குத் துடுப்பு பகையானால்
அங்கு பாய்மரத்தாலே உதவியுண்டு
படகுக்குத் துடுப்பு பகையானால்
அங்கு பாய்மரத்தாலே உதவியுண்டு
கடலுக்கு நீரே பகையானால்
அங்கு கதை சொல்லும் அலைகளுக்கிடமேது
மலருக்குத் தென்றல் பகையானால்
அது மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு


கண்ணுக்குப் பார்வை பகையானால்
அது கருத்தால் உணர்ந்திட வழியுண்டு
பெண்ணுக்குத் துணைவன் பகையானால்
அந்தப் பேதையின் வாழ்வில் ஒளி ஏது
மலருக்குத் தென்றல் பகையானால்
அது மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு
நிலவுக்கு வானம் பகையானால்
அது நடந்திட வேறே வழி ஏது
மலருக்குத் தென்றல் பகையானால்
அது மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு

Tuesday, May 13, 2008

குமரிப்பெண்ணின் ......

குமரிப் பெண்ணின் உள்ளத்திலே
குடியிருக்க நான் வரவேண்டும்
குடியிருக்க நான் வருவதென்றால்
வாடகை என்ன தரவேண்டும்

குமரிப்பெண்ணின் கைகளிலே
காதல் நெஞ்சைத் தரவேண்டும்
காதல் நெஞ்சைத் தந்துவிட்டு
குடியிருக்க நீ வரவேண்டும்(குமரிப்)

தென்றல் தங்கையாம் திங்கள் தோழியாம்
கன்னி ஊர்வலம் வருவாள்
அவள் உன்னைக் கண்டு
உயிர் காதல் கொண்டு
தன் உள்ளம் தன்னையே தருவாள்
நான் அள்ளிக்கொள்ள அவள் பள்ளிகொள்ள
சுகம் மெல்ல மெல்லவே புரியும் (2)
கை தொடுவார் தொடாமல் தூக்கம் வருமோ
துணையைத் தேடி நீ வரலாம் (2)(குமரிப்)

பூவை என்பதோர் பூவை கண்டதும்
தேவை தேவை என வருவேன்
இடை மின்னல் கேட்க
நடை அன்னம் கேட்க
அதை உன்னைக் கேட்டு நான் தருவேன்
கொடுத்தாலும் என்ன எடுத்தாலும் என்ன
ஒரு நாளும் அழகு குறையாது (2)
அந்த அழகே வராமல் ஆசை வருமோ
அமுதும் தேனும் நீ பெறலாம் (2)(குமரிப்)