Showing posts with label அலிபாபாவும் நாற்பது திருடர்களும். Show all posts
Showing posts with label அலிபாபாவும் நாற்பது திருடர்களும். Show all posts

Tuesday, August 19, 2008

நாம ஆடுவதும் பாடுவதும் காசுக்கு...

நாம ஆடுவதும் பாடுவதும் காசுக்கு
பலர் ஆளை குல்லா போடுவதும் காசுக்கு
சிலர் கூடுவதும் குழைவதும் காசுக்கு
காசுக்கு காசுக்கு காசுக்கு
நாம ஆடுவதும் பாடுவதும் காசுக்கு
பலர் ஆளை குல்லா போடுவதும் காசுக்கு
சிலர் கூடுவதும் குழைவதும் காசுக்கு
காசுக்கு காசுக்கு காசுக்கு

பல்லு இல்லாத வெள்ளை தாடி
மாப்பிள்ளை தேடி
தன் செல்ல பெண்ணை தந்திடுவோர் கோடானு கோடி
பல்லு இல்லாத வெள்ளை தாடி
மாப்பிள்ளை தேடி
தன் செல்ல பெண்ணை தந்திடுவோர் கோடானு கோடி
எல்லாம் பெட்டியிலே இருக்கும் காசுக்கு

நாம ஆடுவதும் பாடுவதும் காசுக்கு
பலர் ஆளை குல்லா போடுவதும் காசுக்கு
சிலர் கூடுவதும் குழைவதும் காசுக்கு
காசுக்கு காசுக்கு காசுக்கு

பணம் படைத்தவரின் சொல்லை கேட்டு
அதுக்கு தாளம் போட்டு
பலர் பல் இளித்து பாடிடுவார் பின் பாட்டு
பணம் படைத்தவரின் சொல்லை கேட்டு
அதுக்கு தாளம் போட்டு
பலர் பல் இளித்து பாடிடுவார் பின் பாட்டு
எல்லாம் பெட்டியிலே இருக்கும் காசுக்கு

நாம ஆடுவதும் பாடுவதும் காசுக்கு
பலர் ஆளை குல்லா போடுவதும் காசுக்கு
சிலர் கூடுவதும் குழைவதும் காசுக்கு
காசுக்கு காசுக்கு காசுக்கு

அன்பினாலே ஆள வந்த ...

ஓ....... உள்ளத்தை
கண்டதால் உயிர் காதல் கொண்ட நான்
உருகியே வாழ்த்துகின்றேன்

அன்பினாலே ஆள வந்த அழகு பூபதி
என்னை அன்பினாலே ஆள வந்த அழகு பூபதி
அமீர் பூபதி ஓ அமீர் பூபதி
என் இன்ப வாழ்க்கை தேரின் சாரதி
என்னை அன்பினாலே ஆள...........

சிந்தைதன்னை கவர்ந்து கொண்ட சீதக் காதியே
திராட்சை போல இனிக்க பேசும் ஜீவ ஜோதியே
சிங்கார ரூபகாரனே என் வாழ்வின் பாதியே
அமீர் பூபதி ஓ அமீர் பூபதி
என் இன்ப வாழ்க்கை தேரின் சாரதி
என்னை அன்பினாலே ஆள ............


இரு துருவம் நமது வாழ்வு இந்த உலகிலே
இரண்டும் ஒன்றாய் சேர்ந்ததினாலே இன்ப நிலையிலே
என் இதய வானில் புதுமையான ஒளியும் வீசுதே
அமீர் பூபதி ஓ அமீர் பூபதி
என் இன்ப வாழ்க்கை தேரின் சாரதி
என்னை அன்பினாலே ஆள .........

Tuesday, June 10, 2008

சின்னஞ் சிறு சிட்டே ....

சின்னஞ் சிறு சிட்டே எந்தன் சீனா கற்கண்டே
என் சீனா கற்கண்டே
ஜில் ஜில் என்று ஆடிக்கொண்டே வா பொன்வண்டே
கிட்டே வா பொன்வண்டே

கொஞ்சி கொஞ்சி பேச வந்த கோமாளி ராஜா ..
நீ கோமாளி ராஜா
கெஞ்சி கெஞ்சி கிட்ட வந்து செய்யாதே தாஜா
செய்யாதே தாஜா

சின்னஞ்சிறு சிட்டே எந்தன் சீனா கற்கண்டே
என் சீனா கற்கண்டே

ஜில் ஜில் என்று ஆடிக்கொண்டே வா பொன்வண்டே
கிட்டே வா பொன்வண்டே
சிட்டு என்றும் பட்டு என்றும்
ஊரை ஏய்க்க பாக்குற
தட்டாதே என் சொல்லை
டௌலத் உன்னை ஏய்க்க பாக்கல
நான் உன்னை ஏய்க்க பாக்கல
கட்டிகொள்ளும் முன்னே நம்ப மாட்டாள் புல்புல்லே
நம்ப மாட்டா புல்புல்லே

சின்னஞ்சிறு சிட்டே கொஞ்சம் கிட்டே வாயேண்டி
கொஞ்சம் கிட்டே வாயேண்டி
சீமான் எந்தன் நெஞ்சை தொட்டு தான் பாரேண்டி
தொட்டு தான் பாரேண்டி

கொஞ்சி கொஞ்சி பேச வந்த கோமாளி ராஜா
என் கோமாளி ராஜா
கெஞ்சி கெஞ்சி கிட்டே வந்து செய்யாதே தாஜா
நீ செய்யாதே தாஜா

நம்ப செய்து ஓடி போனால்
நான் என்ன செய்வது
நல்லா இல்லே எந்தன் மேலே
சந்தேகம் நீ கொள்வது
வீண் சந்தேகம் நீ கொள்வது
அல்லா மேலே ஆணை
உன்னை நிக்கா செய்வது நிக்கா செய்வது...

கொஞ்சி கொஞ்சி பேச வந்த கோமாளி ராஜா
என் கோமாளி ராஜா
கெஞ்சி கெஞ்சி கிட்டே வந்து
செய்யாதே தாஜா நீ செய்யாதே தாஜா
சின்னஞ்சிறு சிட்டே எந்தன் சீனா கற்கண்டே
என் சீனா கற்கண்டே
ஜில் ஜில் என்று ஆடிக்கொண்டே
வா பொன்வண்டே கிட்டே வா பொன்வண்டே

உன்னை விட மாட்டேன் ...

உன்னை விடமாட்டேன் உண்மையில் நானே
கபடமெல்லாம்.. கண்டுகொண்டேனே
உண்மைதானே
(உன்னை)


பெண்ணை லேசாய் எண்ணிடாதே
பேதை என்றே இகழ்ந்திடாதே
அன்பு கொண்டால் அமுதம் அவளே
வம்பு செய்தால் விஷமும் அவளே
இன்பக் காதல் இழக்க நேர்ந்தால்
கொஞ்சமேனும் பொறுக்க மாட்டாள்
(உன்னை)


பொங்கும் கடலின் ஆழம்தன்னை
புரிந்து கொள்ளல் மிகவும் எளிது
பெண்கள் நெஞ்சின் ஆழம்தன்னை
இங்கு யாரும் காணல் அரிது
மானைப் போலே வாழும் மங்கை
வன்மம் கொண்டால் பாயும் வேங்கை
(உன்னை)

Friday, May 23, 2008

உல்லாச உலகம் .....

உல்லாச உலகம் உனக்கே சொந்தம்
தய்யடா தய்யடா தய்யடா -
நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா
உல்லாச உலகம் உனக்கே சொந்ததம்
தய்யடா தய்யடா தய்யடா -
நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா
செய்யடா செய்யடா செய்யடா செய்யடா ஓ..ஓ..ஓ..ஓ..ஓ...
செய்யடா செய்யடா செய்யடா

கொடுக்குற தெய்வம் வலுவில் வந்தது......
கொடுக்குற தெய்வம் வலுவில் வந்தது
கூரையைப் பிரிச்சி கொட்டுதம்மா
கிடைச்சத்தை நீயும் வாரிவச்சா
கிட்டாத சுகமே இல்லையடா
கெத்தாகவே ... கெத்தாகவே எதையும் சேர்த்து வைக்காதே
தய்யடா தய்யடா தய்யடா -
நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா

மீச நரச்சி போன பின்னாலே ...
மீச நரச்சி போன பின்னாலே
ஆசை நரச்சி போய்விடுமா
வயசு அதிகம் ஆன பின்னாலே
மனசும் கிழமாய் மாறிடுமா
காத்திருந்த்தா .,,... காத்திருந்தா
அதை அனுபவிச்சிடனும்
தய்யடா தய்யடா தய்யடா -
நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா

பைசாவை கண்டா நைசாக பேச
பைசாவை கண்டா நைசாக பேச
பல ரக பெண்கள் வருவாங்க
பக்கத்தில் வந்தது.. பக்கத்தில் வந்து -
ஹூக்காவை தந்து பாடி ஆடி சுகம் தருவாங்க
பட்டான மேனி ..பட்டான மேனி
பாத்தாலே இன்பம்
மெய்யடா மெய்யடா மெய்யடா -
நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா
செய்யடா செய்யடா செய்யடா செய்யடா
ஓ..ஓ..ஓ..ஓ..ஓ...
செய்யடா செய்யடா செய்யடா
உல்லாச உலகம் உனக்கே சொந்தம்
தய்யடா தய்யடா தய்யடா -
நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா

Thursday, May 22, 2008

சலாம் பாபு சலாம் பாபு ....

சலாம் பாபு சலாம் பாபு என்னைப் பாருங்க தங்க கையினாலே காசை அள்ளி வீசுங்க
சலாம் பாபு ஓ சலாம் பாபு...
சலாம் பாபு சலாம் பாபு என்னைப்பாருங்க தங்க கையினாலே காசை அள்ளி வீசுங்க
சலாம் பாபு ஓ சலாம் பாபு என்னை பாருங்க
தங்க கையினாலே காசை அள்ளி வீசுங்க

தள்ளாத கிழவருக்கும் தாளாத ஆசையே தண்னாலே உண்டாக கண்ணாலே பேசியே
தள்ளாத கிழவருக்கும் தாளாத ஆசையே
தன்னாலே உண்டாக கண்ணாலே பேசியே
காந்த சிலை காதல் வலை
காந்த சிலை காதல் வலை
வீசும் நிலை பாருங்க
கனவு இல்லீங்க நினைவுதானுங்க
கனவு இல்லீங்க நினைவுதானுங்க
கணமேனும் வீண் காலம் கழிக்காதீங்க

ஓ சலாம் பாபு சலாம் பாபு என்னை பாருங்க தங்க கையினாலே காசை அள்ளி வீசுங்க

மாசில்லா அழகாலே ஆனந்தம் மூட்டியே வானவில்லில் காணாத வர்ண ஜாலம் காட்டியே மாசில்லா அழகாலே ஆனந்தம் மூட்டியே
வானவில்லில் காணாத வர்ண ஜாலம் காட்டியே
ஜொலிக்கும் உடை தளுக்கு நடை
மயக்கும் முகம் பாருங்க
சொந்தம் கொண்டாலே இன்பம் உண்டாகும்
சொந்தம் கொண்டாலே இன்பம் உண்டாகும்
கணமேனும் வீண் காலம் கழிக்காதீங்க

ஓ சலாம் பாபு சலாம் பாபு என்னை பாருங்க தங்க கையினாலே காசை அள்ளி வீசுங்க சலாம் பாபு சலாம் பாபு என்னை பாருங்க தங்க கையினாலே காசை அள்ளி வீசுங்க

Wednesday, May 21, 2008

அழகான பொண்ணு நான் ...


அழகான பொண்ணு நான் அதுக்கேத்த கண்ணுதான் என் கிட்டே இருப்பதெல்லாம் தன்மானம் ஒண்ணுதான் (அழகான )

ஈடில்லா காட்டு ரோஜா
இதை நீங்க பாரூங்க
எவரேனும் பறிக்க வந்தா
குணமேதான் மாறுங்க முள்ளேதான் குத்துங்க ....ஓ...ஓ...
அங்கொண்ணு இளிக்குது ஆந்தை போல் முழிக்குது
ஆட்டத்தை ரசிக்கவில்லை ஆளைத்ததான் ரசிக்குது (அழகான )

இங்கொன்னு என்னைப் பாத்து
கண்ஜாடை பண்ணுது ஏமாளிப் பொண்ணு என்னு
ஏதேதோ எண்ணுது ஏதேதோ எண்ணுது
பெண்ஜாதியை தவிக்க விட்டு பேயாட்டம் ஆடுது
பித்தாகி என்னைச் சுத்தி கைத்தாளம் போடுது (அழகான )

என் ஆட்டமெல்லாம் .....

என் ஆட்டமெல்லாம் ஒரு வேட்டையிலே தானே
நான் அதில் தவறேனே
என் ஆட்டமெல்லாம் ஒரு வேட்டையிலே தானே
நான் அதில் தவறேனே


என் தோற்றத்தினால் தடுமாறிடுதே
இந்தக் கூட்டத்தில் உள்ளோர் மனமே
இந்தக் கூட்டத்தில் உள்ளோர் மனமே இனி
ஆட்டத்தினால் என்ன நேர்ந்திடுமோ
அது யாருக்கும் தெரியாதே
அது யாருக்கும் தெரியாதே

(என் )

என் வீட்டினிலே உள்ள கூட்டினிலே
வந்து வீழ்ந்தது பறவை இனமே
வந்து வீழ்ந்தது பறவை இனமே
அந்தக் கூட்டமெல்லாம் இந்த நேரத்திலே
எமன் கோட்டையை காண்பது நிஜமே
எமன் கோட்டையை காண்பது நிஜமே

(என் )

Monday, May 12, 2008

மாசிலா

மாசிலா உண்மை காதலே
மாறுமோ செல்வம் வந்த போதிலே

பேசும் வார்தை உண்மைதானா
பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேஷமா ?

கண்ணிலே மின்னும் காதலை
கண்டுமா சந்தேகம் எந்தன் மீதிலே

நெஞ்சிலே நீங்கிடாது கொஞ்சும் இன்பமே
நிலைக்குமா இந்த எண்ணம் எந்த நாளுமே (பேசும்)

உனது ரூபமே உள்ளம் தன்னில் வாழுதே
இனிய சொல்லினால் எனது உள்ளம் மகிழுதே

அன்பினாலே ஒன்று சேர்ந்தோம்
இன்று நாம் இன்ப வாழ்வின்
எல்லை காணுவோம்

http://www.youtube.com/watch?v=UBlNTzmMJf0&feature=fvw