ஆடிய பாதங்கள் அம்பலத்தில்
இங்கு ஆடிட நான் வந்தேன் உன் தலத்தில்
(ஆடிய)
பார்வதி ஓர் அங்கம் உன்னிடத்தில்
அவள் பார்க்கட்டும் தன்னைத்தான் என்னிடத்தில்
(ஆடிய )
கண்ணில் ஒன்றாய் இருக்க
திங்களாய் பிறந்தேனோ
கற்றை குழலிருக்க
கங்கையாய் நடந்தேனோ
கழுத்தில் சுழன்றிருக்க
பாம்பென பிறந்தேனோ
கையில் அமர்ந்திருக்க
மான் என பிறந்தேனோ
(ஆடிய.. )
கல்லை கனியென அருள்தரவரும் தில்லை
திருநகையினில் நடமிடும் உந்தன் வண்ணம்
எந்தன் விழிதன்னில் விளையாடிட
தக தகவென வரும் எழில் முகமொரு
தரிசனம் தந்தோம் தந்தோம் என்று
இங்கும் அங்கும் இன்றி
எங்கெங்கும் மின்னுகிற வடிவே
கொதித்திடும் உடல் உனது நினைவினில்
துடித்திடும் கரம் வருக அருகினில்
மதனினும் கொடியவன் விடும் ஒரு கணையினில்
நலிந்தும்
மெலிந்தும்
வருந்தும் எனக்கோர் துணையென
வழங்கும் சுகங்கள் அருளுக
(ஆடிய )
Wednesday, August 18, 2010
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
http://www.youtube.com/watch?v=Y6uIcNXmb-0
உடனே கேட்டேன் யு டியூபில் பூங்குழலி..
அருமை..
ஆமாம் சாந்தி .சுசீலா இந்த பாடலை அத்தனை அருமையாக பாடியிருப்பார்.நடனமும் அத்தனை அருமையாக இருக்கும் .
லிங்க் கொடுத்ததற்கும் நன்றி
Post a Comment
உங்கள் வருகைக்கு நன்றி