Saturday, August 28, 2010

வாரேன் வழி பார்த்திருப்பேன் ...

வாரேன்
வழி பார்த்திருப்பேன்
வந்தால்
இன்பம் தந்திடுவேன்

என்ன தருவே ?
என்னை தருவேன்.

அந்தி மயங்குற நேரத்திலே
ஆத்தங்கரை ஓரத்திலே
அத்தை மகள் ஏக்கத்திலே காத்திருப்பேன்

போகவே மனசில
அப்ப இரேன்
இருக்கவும் முடியலையே

வரும் தை மாதம் பார்த்து
கையோடு சேர்த்து ஊர்கோலம் போனாலென்ன
இடை தாங்காத பாரம்
நான் கொஞ்சம் தாங்கி
உன்னோடு வந்தால் என்ன

செவ்வானம் பூத்தூவ
தென்பாங்கு தான் வாழ்த்த
கல்யாண நாள் காணும் அன்று
பொன்னான மாப்பிள்ளை பெண்ணோடு பாரென்று
ஊரெங்கும் பாராட்டும் நின்று
( அந்தி மயங்குற ...)

அடி இந்நேரம் உன்னை காணாத கண்கள்
பூவாகி நின்றேனடி
இந்த கட்டாத மாலை
உன் மார்பில் சேர்ந்து
தேனூர வந்தேனுங்க

சித்தாடை காத்தாட
செவ்வாழை கூத்தாட
கண்டாலும் என் பார்வை கொஞ்சும்
மச்சானின் நெஞ்சோடு
மையோடும் கண்ணோடு
போராடும் என் மேனி கெஞ்சும்
(அந்தி மயங்குற ..)

வாரேன்
நான் வாரேன்
போய் வாரேன்
நான் வாரேன்




No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி