Saturday, August 14, 2010

ஆட வாங்க ...

ஆட வாங்க அண்ணாத்தே
அஞ்சாதீங்க அண்ணாத்தே
அங்கே இங்கே பார்க்கிறது என்னாத்தே
(ஆட வாங்க )

தாளத்தோடு ஆடும் போது
தகிடு தத்தோம் ஆகாது
கால தூக்கி போடும் போதும்
கவனம் மாறக் கூடாது
ஆள பாத்து மயங்கி நின்னா
அபாயம் மிக பொல்லாது
அதனாலே
என்மேலே
பின்னாலே பழி சொல்லாதே
ஆட வாங்க
அய்யா ஆட வாங்க
சும்மா ஆட வாங்க
( ஆட வாங்க)

ஆட்டம் போட்ற அம்மாளு
அசந்து நிக்கிற அம்மாளு
அய்யாகிட்ட செல்லாதம்மா குல்மாலு
சும்மா என்னே சோள கொல
பொம்ம போல எண்ணாதே
எம்மா எல்லாம் பாடி ஆடி
சிரிச்சு கேலி பண்ணாதே
கும்மாளமும் குலுக்கு மினுக்கும்
செல்லாது இவர் முன்னாலே
அதனாலே இனிமேலே
முன்போலே
நீ துள்ளாதே
ஆட்டம் போட்ற
அடி ஆட்டம் போட்ற அம்மாளு
நம்மகிட்டே ஆட்டம் போட்ற
ஆட்டம் போட்ற அம்மாளு
அசந்து நிக்கிற அம்மாளு
அய்யாகிட்ட செல்லாதம்மா குல்மாலு

கவனமாக ஆடிவிட்டா
கண்ணாலமும் உண்டாகும்
காரியத்தை கோட்டை விட்டா
கையும் காலும் ரெண்டாகும்
சமயத்திலே தப்பா விட்டா
ஜம்பமெல்லாம் வீணாகும்
அதனாலே
என்மேலே
பின்னாலே பழி சொல்லாதே
(ஆட வாங்க..)

ஆட்டம் போட்ற அம்மாளு
அசந்து நிக்கிற அம்மாளு
அய்யாகிட்ட செல்லாதம்மா குல்மாலு

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி