Monday, August 23, 2010

காதலெனும் சோலையிலே ..

காதலெனும் சோலையிலே ராதே ராதே
நான் கண்டெடுத்த பொன்மலரே ராதே ராதே
காதல் என்னும் காவியத்தை ராதே ராதே
ராதே ராதே ராதே
காதெலென்னும் காவியத்தை
உந்தன் கண்களிலே கண்டேனடி ராதே ராதே
(காதலென்னும் சோலையிலே ..)

என்னிதய வீணையிலே ராதே ராதே
இன்னொலியை மீட்டி விட்டாய் ராதே ராதே
உன்னழகின் போதையிலே ராதே ராதே
ராதே ராதே ராதே
உன்னழகின் போதையிலே
எந்தன் உள்ளம் வெறி கொள்ளுதடி ராதே ராதே
புன்னகையை வீசுகின்றாய் ராதே ராதே
மௌன போதனைகள் பேசுகின்றாய் ராதே ராதே

கன்னம் குழிவதிலே ராதே ராதே
எந்தன் எண்ணம் சுழலுதடி ராதே ராதே
(காதலென்னும் சோலையிலே ...)

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி