பழத்தோட்டம் என் தோட்டம்
பறவைக்கிங்கே கொண்டாட்டம்
கவன் எடுத்தால் திண்டாட்டம்
கன்னி நான் ஒரு அம்பாட்டம்
கனி தேடும் குயிலினமே
கதை சொல்லும் கிளியினமே
அடுத்தவரின் பொருள் மீது
ஆசை வைக்க கூடாது
வேல் சிரிக்குது கண்களிலே
கவன் இருக்குது கைகளிலே
பிழை செய்பவர் மீதினிலே
கல் எறிவேன் குருவிகளே
(பழத்தோட்டம் ..)
அதிகாரம் வரும்போது
தவறாத மனம் வேண்டும்
தலைக்கனங்கள் வந்தாலே
தான் வீழும் நிலை தோன்றும்
தினம் உழைப்பது பொதுவுடைமை
நம் உடல் இது தனி உடமை
நல்ல ஆளென பேரெடுத்தல்
அது அவரவர் குண நிலமை
விதை தூவ நிலம் தேவை
புவி ஆழ மதி தேவை
அக்கிரம் நீ செய்தால்
அதை கேட்கும் ஆள் தேவை
நான் துணிவுள இளம் மங்கை
எனை தொடுவது யாரிங்கே
விழி அசைவுகள் கவி கூறும்
அது ஆயிரம் பொருள் கூறும்
(பழத்தோட்டம் ...)
Friday, August 20, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
உங்கள் வருகைக்கு நன்றி