Saturday, August 14, 2010

நலங்கிட்டு பார்ப்போமடி

நலங்கிட்டு பார்ப்போமடி
ராணிக்கு அலங்காரம் செய்வோமடி
வாடி
குலுங்கிடும் அழகுக்கு அழகு செய்தால்
நம்மை குருடென்று சொல்லாரோடி
காண்பவர் குருடென்று சொல்லாரோடி
போடி
சிலம்பும் பொன்னாடையும் ஆபரணங்களும்
எழில் பெற காண்போமடி ராணியால்
ஒளி பெற காண்போமடி
வாடி
(நலங்கிட்டு)

களங்கமில்லா மதிவதனித்திலே களிப்பினை காண்போமடி
கல்யாண சிரிப்பினை காண்போமடி
வாடி
(நலங்கிட்டு)

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி