Saturday, February 26, 2011

ஆனந்தமாய் வாழ வேண்டுமே

மாநிலத்தின் இருள் நீங்க
வானில் வரும் ஜோதி
மன இருளும் நீங்கிடவே
அருள்வாய் நீயே

ஆனந்தமாய் வாழ வேண்டுமே
மாந்தர் ஆனந்தமாய் வாழ வேண்டுமே
நாட்டில் அமைதி சூழ
பசியும் பிணியும் வலியுமே
அகல வேண்டுமே
(ஆனந்தமாய்...)


அன்பு மார்க்கம் கண்ட அறிவின் தீபமே
மக்கள் அகத்தின் அழுக்கு என்றும் கோபதாபமே
(ஆனந்தமாய் ..)


ஒடுங்கி கிடைத்த நெஞ்சின் உணர்சசி கொஞ்சவே
உயிரை அள்ளும் பாடல் தந்த கவிதை மன்னனே
உந்தன் உள்ளம் கண்ட கனவுகளும் பலித்த வாயிலே
கல்வி அறிவு மூட்டியே
(ஆனந்தமாய் ...)


மலர்ந்த முகத்தை காட்டும் சிவந்த ரோஜாவே
சிரித்து
மலர்ந்த முகத்தை காட்டும் ரோஜாவே
உனைப் போல மலர்ந்த முகத்தை காட்டும் மாந்தர் அனைவரும்
வாழ்வில் வளமும் மிஞ்சியே

வாழ்வில்
ஆனந்தமாய் வாழ வேண்டுமே









http://www.youtube.com/watch?v=bAR2otSAdKo&NR=1

Wednesday, February 23, 2011

அன்னமிட்ட வீட்டிலே

உபகாரம் செய்தவர்க்கே
அபகாரம் செய்ய எண்ணும்
முழு மோசக்காரன்
தானே
முடிவிலே
நாசமாவான் ஆ ஆ ஆ

அன்னமிட்ட வீட்டிலே
கன்னக்கோல் சாத்தவே
எண்ணம் கொண்ட பாவிகள்
மண்ணாய் போக நேருமே

தேகம் கண்டு மயங்கியே
தீராத ஆசை கொண்டு
மோசமும் போன பின்னால்
மனவேதனை அடைவதாலே
லாபம் என்ன

பாலை ஊற்றி பாம்பை நாம்
வளர்த்தாலும் நம்மையே
கடிக்கத்தானே வரும் அதை
அடித்து கொல்ல நேருமே
(அன்னமிட்ட வீட்டிலே )


http://video.google.com/videoplay?docid=1099261662232911520#docid=-5312265452834569669

Tuesday, February 15, 2011

மனம் போல் ...

மனம் போல் வாழ்வு பெறுவோமே
இணைந்தே நேசமுடன் எந்நாளும்
நாம் மகிழ்வோம்
மெய் அன்பாலே
(மனம் போல் )


என்னுயிர் நாதன் குணமே
பாரில் நேர்மையாகினார் புவிமேல்
இந்த நாளும் வாழ்வில் சுபதினமே
இன்பமே கொள்ளுவோம்
(மனம் போல் )


பெண்மனம் ஒன்றை நினைத்தால்
அதை திண்ணமாக செய்து முடிப்பாள்
உயர் காதல் வாழ்வு பெற துடிப்பாள்
உண்மையே அன்பினால்
(மனம் போல் )

http://www.in.com/music/manthiri-kumari/songs-65127.html