குத்தாலம் அருவியிலே குளிச்சதுப் போல் இருக்குதா
குத்தாலம் அருவியிலே குளிச்சதுப் போல் இருக்குதா
மனச மயக்குதா சுகமும் கிடைக்குதா
மனச மயக்குதா சுகமும் கிடைக்குதா
குத்தாலம் அருவியிலே குளிச்சதுப் போல் இருக்குதா
ஒடம்பு சிலுக்குது உள்ளம் சிரிக்குது
ஒடம்பு சிலுக்குது உள்ளம் சிரிக்குது
கொட்டும் பனி கடலுக்குள்ளே
குதிச்சதுப் போல் இருக்குது
கொட்டும் பனி கடலுக்குள்ளே
குதிச்சதுப் போல் இருக்குது
பட்டுப்போல் ரோஜாப்பூவு பனித்துளியில் குளிக்குது
பறக்கும் வண்டுகள் எல்லாம் தேனில் குளிக்குது
கட்டறுந்த இளம் மனசு காதலிலே குளிக்குது
காத்திருக்கும் நமக்கும் நல்ல காலம் வரப்போகுது
காத்திருக்கும் நமக்கும் நல்ல காலம் வரப்போகுது
குத்தாலம் அருவியிலே குளிச்சதுப் போல் இருக்குதா
சுட்டெடுக்கும் வேர்வையிலே ஒரு மனசு குளிக்குது
காற்றை புடிச்சிக்கிட்டு தண்ணீரில் மிதக்குது
உல்லாச கோட்டைகட்டி உச்சியில கொடியும் கட்டி
பல்லாண்டு பாடி ஒண்ணு களிக்குது
உல்லாச கோட்டைகட்டி உச்சியில கொடியும் கட்டி
பல்லாண்டு பாடி ஒண்ணு களிக்குது
பன்னீர ஊத்தி ஊத்தி குளிக்குது
த்சோ ..த்சோ ..த்சோ ..
குத்தாலம் அருவியிலே குளிச்சதுப் போல் இருக்குதா
தங்கம் போல் உடம்பை தொட்டா
தனி மயக்கம் பிறக்குது
தங்கம் போல் உடம்பை தொட்டா
தனி மயக்கம் பிறக்குது
சிங்கார கை பட்டா சிலுசிலுப்பாக இருக்குது
சிங்கார கை பட்டா சிலுசிலுப்பாக இருக்குது
குத்தாலம் அருவியிலே குளிச்சதுப் போல் இருக்குதா
குத்தாலம் அருவியிலே குளிச்சதுப் போல் இருக்குது
மனசும் மயங்குது சுகமும் கிடைக்குது
குத்தாலம் அருவியிலே குளிச்சதுப் போல் இருக்குது
Tuesday, February 9, 2010
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
ஒரு சிறு வேண்டுகோள். திரைப்படத்தோடு சேர்ந்து பாடகர், பாடலாசிரியர் மற்றும் இசையமைப்பாளரையும் சேர்த்தால் சிறப்பு. :)
பாடல்களை முடிந்தவரையில் சேர்த்து விட்டு அதை செய்யலாம் என்றிருந்தேன்.இசை அமைப்பாளர்கள் பெயரை ஒரு தனிப் பதிவாக இட்டிருக்கிறேன் .ஆனால் பாடல்களுடன் சேர்த்து போட சில காலம் ஆகும் .
உங்கள் வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி யோகநாதன்
Post a Comment
உங்கள் வருகைக்கு நன்றி