Monday, February 8, 2010

பம்பை உடுக்கை கொட்டி

கொல்லி மலை காட்டுக்குள்ளே
குள்ள நரி கூட்டமடி ....
குள்ள நரி கூட்டத்திலே
புள்ளி மான் நிக்கிதடி
கன்னி வெச்சு வல விரிச்சா ...
சின்ன மான் சிக்குமடி
போடு

பம்பை உடுக்கை கொட்டி
பரிவட்டம் மேலே கட்டி
தங்கரதம் போலே ஆடும் சித்தாரக் கள்ளி
எந்தன் தாளத்தையே கேட்டு ஆடு
அச்சாரம் சொல்லி
ஹோ ஹோ ஹோ .... ஹோய்
பம்பை உடுக்கை கொட்டி
பரிவட்டம் மேலே கட்டி
தங்கரதம் போலே ஆடும் சித்தாரக் கள்ளி
எந்தன் தாளத்தையே கேட்டு ஆடு அச்சாரம் சொல்லி
ஹோ ஹோ ஹோ ...

கச்சை சலங்கை கட்டி
கை தாளம் மேளம் கொட்டி
கச்சை சலங்கை கட்டி
கை தாளம் மேளம் கொட்டி
அச்சாரம் ஏற்று கொள்ளும் ஆச மச்சான்
எந்தன் ஆட்டத்தே பாத்து தானே நேசம் வெச்சான்


பம்பை உடுக்கை கொட்டி
பரிவட்டம் மேலே கட்டி
சிங்கக்குட்டி போலே ஆடும் செவத்த மச்சானே
இந்த சேலைக்கேத்த ஜோடி நீயே
பாடு மச்சானே

கன்னகோல் போடுவதற்கும்
காவல் போர் செய்வதற்கும்
தந்தன தையா தானா தந்தன
தந்தன தையா தானா தந்தன
கன்னகோல் போடுவதற்கும்
காவல் போர் செய்வதற்கும்
களம் என்று பேரு வந்த காரணம் என்ன
கட்டு கதை எல்லாம் அளக்காமல் கூறடி நின்னு
ராத்திரி நேரம் யாரும் பார்த்திடா வண்ணம்
ராத்திரி நேரம் யாரும் பார்த்திடா வண்ணம்
அந்த ரகசியம் நடப்பதாலே
பேருமே வைத்தார்
அந்த ராஜா தான் களம் என்று ஊரிலே சொன்னார்


பம்பை உடுக்கை கொட்டி
பரிவட்டம் மேலே கட்டி
சிங்கக்குட்டி போலே ஆடும் செவத்த மச்சானே
எந்தன் தாளத்தையே கேட்டு ஆடு
அச்சாரம் சொல்லி


ஏழ் -எட்டு பிள்ள பெத்து ஏழையாய் ஆகிவிட்டு
தந்தன தையா தானா
தந்தன தந்தன தையா தானா தந்தன
ஏழ் -எட்டு பிள்ள பெத்து ஏழையாய் ஆகிவிட்டு
வாழாம வாடுறாங்க ரோட்டுல நின்னு
அந்த வாட்டத்த தீர்பதற்கு கூறனும் ஒண்ணு
கணக்காக ஒண்ணு ரெண்டு கச்சிதமாக பெத்து
கணக்காக ஒண்ணு ரெண்டு கச்சிதமாக பெத்து
படுக்கை தனை சுத்தி வைக்க வேணும் மச்சானே
பின்னாலே அதுக்காக சொத்து சுகம் சேரும் மச்சானே


பம்பை உடுக்கை கொட்டி
பரிவட்டம் மேலே கட்டி
தங்கரதம் போலே ஆடும்
சித்தாரக் கள்ளி
எந்தன் தாளத்தையே கேட்டு ஆடு
அச்சாரம் சொல்லி

காலையில் தோன்றி நின்று
மாலையில் போய் மறையும்
தந்தன தையா தானா
தந்தன தந்தன தையா தானா தந்தன
காலையில் தோன்றி நின்று
மாலையில் போய் மறையும்
சூரியன் செயலும் என்ன கொஞ்சம் சொல்லடி
அந்த சூட்சுமத்த மட்டும்
எந்தன் காதில் சொல்லடி
பிறப்பதெல்லாம் இறக்கும் பேர் உண்மை தத்துவத்தை
பிறப்பதெல்லாம் இறக்கும் பேர் உண்மை தத்துவத்தை
சிறப்பாக சூரியனும் சொல்லும் மச்சானே
இந்த சேதியிலே சாமி கூட சேரும் மச்சானே


பம்பை உடுக்கை கொட்டி
பரிவட்டம் மேலே கட்டி
தங்கரதம் போலே ஆடும் சித்தாரக் கள்ளி
எந்தன் தாளத்தையே கேட்டு ஆடு
அச்சாரம் சொல்லி
ஒஹ் ஹோ ஹோ .....

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி