கண்ணிரண்டும் தேவை இல்லை காண்பதற்கு
காதிரண்டும் தேவை இல்லை கேட்பதற்கு
கண்ணிரண்டும் தேவை இல்லை காண்பதற்கு
காதிரண்டும் தேவை இல்லை கேட்பதற்கு
உண்மை அன்பு இருந்தால் போதாதா
நாம் உள்ளத்தினால் உணர்ந்து கொள்ள முடியாதா
உண்மை அன்பு இருந்தால் போதாதா
நாம் உள்ளத்தினால் உணர்ந்து கொள்ள முடியாதா
(கண்ணிரண்டும் தேவை இல்லை காண்பதற்கு)
கண்ணில்லா குமுத மலர் இரவினிலும்
வெண்ணிலவு தோன்றுவதை உணரவில்லையா
கண்ணில்லா குமுத மலர் இரவினிலும்
வெண்ணிலவு தோன்றுவதை உணரவில்லையா
சின்ன சின்ன இதழ் விரித்து
சிரிப்பை சூடி முகம் மலர்ந்தது
எண்ணத்தில் இன்பம் கொண்டு இருப்பதில்லையா
சின்ன சின்ன இதழ் விரித்து
சிரிப்பை சூடி முகம் மலர்ந்தது
எண்ணத்தில் இன்பம் கொண்டு இருப்பதில்லையா
(கண்ணிரண்டும் தேவை இல்லை காண்பதற்கு )
நெஞ்சில் எழும் அலைகளுக்கு கண்கள் உண்டு
அதில் நீந்தும் உயிர் கனவுக்கெல்லாம்
செவிகளும் உண்டு
நெஞ்சில் எழும் அலைகளுக்கு கண்கள் உண்டு
அதில் நீந்தும் உயிர் கனவுக்கெல்லாம்
செவிகளும் உண்டு
அன்பு மனம் படைத்தவர்கள்
இன்ப வாழ்வு கொடுப்பவர்கள்
எங்கிருந்த போதும் அவை அறிந்து சொல்லாதா
அன்பு மனம் படைத்தவர்கள்
இன்ப வாழ்வு கொடுப்பவர்கள்
எங்கிருந்த போதும் அவை அறிந்து சொல்லாதா
(கண்ணிரண்டும் தேவை இல்லை காண்பதற்கு )
Tuesday, February 9, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
உங்கள் வருகைக்கு நன்றி