Sunday, April 14, 2013

அழகுக்கு மறுபெயர் பெண்ணா

அழகுக்கு மறுபெயர் பெண்ணா
அல்லி  மலருக்கு  மறுபெயர் கண்ணா
தமிழுக்கு மறுபெயர் அமுதா
அதை தருகின்ற இதழ் தங்க சிமிழா
(அழகுக்கு )


நூறு கோடி பாடல் நெஞ்சில்
ஊறுகின்ற வேளையிது
ஏடு போன்ற கன்னம் கண்டு
இதழ்களாலே எழுதுவது
அந்தி பொழுதில் தொடங்கும்
அன்பு கவிதை அரங்கம்
இளமைக்கு பொருள் சொல்ல வரவா
அந்த பொருளுக்கு மறுபெயர் உறவா 
(அழகுக்கு )


நாடி நரம்பில் கோடி மின்னல்
ஓடி  பாய்ந்து மறைவதென்ன
கூந்தல் தொடங்கி பாதம் வரையில்
கைகள் கொண்டு அளப்பதென்ன
அது முதல் முதல் பாடம்
ம் ம் ம் ம்
எடுப்பதும் கொடுப்பதும் நடக்கும்
அதில் இருவருக்கும்   சரி பங்கு இருக்கும்
(அழகுக்கு )


ஆலிலை மேலே கண்ணனை போலே
நூலிடை  மேலே ஆடிடவோ
ஆடும் போது  கூடும் சுகத்தை
வார்த்தை கொண்டு கூறிடவோ 
பெண்மை மலர்ந்தே வழங்கும்
தன்னை மறந்தே மயங்கும்
விடிந்தபின் தெளிவது  தெளியும்
அது தெளிந்தபின் நடந்தது புரியும்
(அழகுக்கு )

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையான பாடல்...

நீண்ட நாட்கள் கழித்து பதிவிட வந்தமைக்கு நன்றி... இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

பால கணேஷ் said...

என்றைக்கும் இனிப்பவை வாத்யார் பாடல்கள்! இந்த்ப் பாடல் விஷுவலாகவும் ரசனைக்கு வலு சேர்த்தது. அருமை!

பூங்குழலி said...

பாடலை பார்த்து எழுத நேரம் கிட்டாததே காரணம் .நன்றி தனபாலன்

பூங்குழலி said...

ஆமாம் கணேஷ். வாத்யார் பாடல்களை மிஞ்ச பாடல்கள் இல்லை .

செல்வி said...

மிகவும் அருமை

பூங்குழலி said...

நன்றி செல்வி

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி