காமுகர் நெஞ்சில் நீதியில்லை
அவர்க்கு தாயென்றும் தாரமென்றும் பேதமில்லை
காமுகர் நெஞ்சில் நீதியில்லை
தீமைகள் போல் அவர்க்கு செல்வமில்லை
கொலை செய்வதை போல் ஒரு இன்பமில்லை
மாதர்கள் வாழ்வில் காவலுமில்லை
மானமும் ஜீவனும் வாழ்வதும் இல்லை
(காமுகர் நெஞ்சில் ..)
காவியம் போற்றுகிற வீரமெல்லாம்
வளர் காவிரி மண்டல செல்வமன்றோ
தீரர்களாலே சீர்படும் நாடும்
தீயவர் கால்களில் பாழ்படும் அன்றோ
(காமுகர் நெஞ்சில் ...)
4 comments:
இப்பாடலை கேட்கவும், யுட்யூபில் பார்க்கவும் முடிய்வில்லையே!
வ.க.கன்னியப்பன்
https://www.youtube.com/watch?v=SOvWedyOW6g
இந்த லிங்க்கை முயற்சி செய்யுங்கள்
நீங்கள் கொடுதத இணைப்பில் பாடலைக் கேட்டேன். திரைப்படமும் பார்த்தேன். பிறன்மனை நயவாமையும், ஒரு தலிக் காதலும் (காமமும்) எவ்வளவு தீயது என்று திரைப்படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. கதை வசனமும், பாடல்களும் கவிஞர் கண்ணதாசன் தான். மிகவும் அருமை.
தீயவர் தோள்களில் பாழ்படும் அன்றோ என்பதில் ’தீயவர் கால்களில் பாழ்படும் அன்றோ’ என்று வருகிறது.
அன்புடன்,
வ.க.கன்னியப்பன்
நன்றி கன்னியப்பன் ..மாற்றிவிட்டேன்
Post a Comment
உங்கள் வருகைக்கு நன்றி